Wednesday, September 1, 2010

வள்ளுவர் கோட்டம்: சென்னை

1976ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் குப்பை மேடாக இருந்த ஏரியின் நடுப்பகுதியில், திருவள்ளுவர் மேல் கொண்ட மாறாத பற்றினால் அன்றைய முதல்வர், கலைஞர் கருணாநிதியால், சிற்ப கலைஞர் கணபதி ஸ்தபதியை கொண்டு வடிவமைக்க பட்டு East Coast Constructions and Industries ஆல் உருவக்க பட்ட நினைவகம் வள்ளுவர் கோட்டம். ”குப்பையும் கோபுரமாகும் கோபுரமும் குப்பை ஆகும்” என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணமக இன்று விளங்குகிறது.

நுழைவாயிலில் இருந்து அரங்கமும், தேரின் மேல் பகுதியும்.




இந்தியன் வங்கி பராமரிப்பில் புல்வெளி


திருவாரூர் தேர்வடிவில்

திருவாரூர் தேரின்(திரு.கருணாநிதி பிறந்தது திருவாரூர் அருகில் தான்) மாதிரியில் அமைக்க பட்டுள்ள சிற்பத்தேர் அனைவரையும் மிகவும் கவரும். ஆசை ஆசையாக இந்த நினைவகத்தை வடிவமைத்து கட்டிய திரு. கருணாநிதி அவர்களுக்கு அதை திறந்து வைக்கும் வாய்ப்பு இல்லாமல் அவரது ஆட்சி கலைக்கபட்டு விட்டது, அவசர நிலை அறிவிக்க பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறை படுத்தபட்டது. . ஜனாதிபதி ஆட்சி செய்த காலத்தில் அன்றைய ஜனாதிபதி திரு. ஃபக்ருதீன் அலி அஹமத் அவர்களால் திறக்க பட்டது. பின்பு 13 ஆண்டுகள் கழித்து 1989ல் மீண்டும் முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட திரு.கருணாநிதி இதே வள்ளுவர் கோட்டத்தில் தான் பதவி ஏற்றுக்கொண்டார்





இந்த நினைவகத்தின் மற்றோர் சிறப்பு இங்குள்ள அரங்கம். தூன்களே இல்லாத இந்த அரங்கம் ஆசியாவின் மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றாகும். ஏறக்குறைய 4000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு களிக்க கூடிய வகையில் அமைந்த அரங்கமகும் இது. நான் சென்று பார்த போது இந்த அரங்கத்தில் வட கிழக்கு மாநிலங்களில் வடிவமைக்க பட்ட கலை பொருட்கள் காட்சி படுத்த பட்டிருந்தன. அழகான புல் வெளியும் மலை செடிகளும் இந்தியன் வங்கியால் உருவக்க பட்டு நன்கு பரமரிக்க படுகிறது.




தேரை சுற்றி அமைக்க பட்டுள்ள வேலியின் உறுதியை சோதிக்கும் சமூக ஆர்வலர்கள்





அரசியல் மறுதல்களால் பல்வேறு காலங்களில் பல்வேறு இன்னல்களையும், பராமரிப்புகளையும் சந்தித்த இந்த வள்ளுவர் கோட்டத்தின் இன்றைய நிலையும் அப்படி ஒன்றும் மெச்சும்படி இல்லை, இப்போது நடப்பது திரு,கருனாநிதியின் ஆட்சியாகவே இருந்தாலும். இன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய ”மண்ணார் & கம்பெனி” போல சில இடங்களிலும், காதல் விளையாட்டுக்கள் அரங்கேரும் இடமாகவும், குப்பை கூளம் சில இடங்களிலும், காண சகிக்க முடியாமல் உள்ளது. ஒரு அழகிய குளம் பராமரிப்பின்றி அழுக்கு குட்டையாக காட்சியளிக்கிறது. இதையெல்லம் மீறி ஒரு சில சுற்றுலா பயனிகளும் வரத்தான் செய்கிறார்கள். முதல்வர் அவர்கள் தன் பல்வேறு பனிகளுக்கிடயே தான் உருவாக்கிய இந்த நினைவகத்தையும் கவனித்து பராமரிக்க செய்தால் நன்றாக இருக்கும். எல்ல வித காட்சிகளையும் படம் பிடித்தாலும் நல்ல விஷங்களையே உங்கள் காட்சிக்கு வைத்திருக்கிறேன்

எது எப்படியோ சென்னை மாநகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கடந்த 35ஆண்டுகளாக விளங்குகிறது இந்த வள்ளுவர் கோட்டம்.
நன்றி:விக்கீபீடியா

Saturday, August 28, 2010

சுற்றுபுற சூழலை நாமே காக்க வேண்டியவர்கள்







நமது சுற்றுபுற சூழலை நாமே காக்க வேண்டியவர்கள், ஏனெனில் அதை கெடுத்தவர்களும் நாமாகிய காரணத்தால். அவர்கள் செய்த தவறால் தான் இந்த பகுதி கெட்டுபோனது, அந்த நிறுவனம் இந்த பகுதியில் வந்ததால் தான் இந்த பகுதி கெட்டுபோனது, நீ / அவன் செய்யும் தவறுகளால் தான் இந்த பகுதி சீரழிகிறது என ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்ளாமல், இதற்கான காரனம், நானாக, என் குடும்பதினராக, என் சுற்றத்தாராக, என் நன்பர்களாக, நான் வசிக்கும் பகுதியுள் வசிக்கும் மக்களாக இருக்கலாம் என நாம் ஏன் நினைக்க கூடாது? மூன்றாவது நபர் மாறவேண்டும், தவறுகள் செய்ய கூடாது என நினைப்பதை விட, நான் எவ்வாறு சுற்றுசூழலை பாதிப்படைய செய்யாமல் இருக்க முடியும், எவ்வாறு பாதுகாக்க முயற்சி எடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து செயல் பட்டால் நலம் அல்லவா?

சுற்று சூழலை பாதிக்கும் முக்கிய காரணங்கள் சில:
அளவுக்கு அதிகமான ஒலி, அளவுக்கு அதிகமான புகை, அளவுக்கு அதிகமான கழிவுகள், அதிக அளவிலான ரசாயனங்கள் பயன்பாடு.


அதிக வாகணங்கள் பயன் பாட்டினால் ஏற்படும் ஒலி(எ.க. சென்னை பெரு நகரின் உள்ளே இருக்கும் டெசிபல் அளவுக்கும் புறநகர் பகுதிகளில் இருக்கும் டெசிபல் அளவுக்கும் நிறைய வேறுபாடு இருக்கும்). வாகணங்கள் பயண்பாட்டினை குறைப்பதன் மூலம் இதை தவிற்க முடியும்.

திருவிழாகாலங்களில், கோவில்களில், தேவாலையங்களில், மசூதிகளில், குருத்வாரக்களில், நம் வீடுகளில் நடை பெரும் கொண்டாட்டங்களில்,உபயோகிக்கப்படும் ஒலிப்பெருக்கிகள் ஏற்படுத்தும் பேரொலிகளிகளை குறைத்தல் மூலம் இவற்றை தவிர்க்கலாம்.

நாம் உபயோகிக்கும் இரண்டு, மூன்று,நாண்கு சக்கர வாகனங்களையும் புகை மிகுதியாகவும் வெளியிடும் இயந்திரங்களையும் தகுந்த காலங்களில்/சீரனா கால இடைவெளிகளில் பராமரித்தும் பழுதுகளை சீரமைப்பதன் மூலமும் புகையை தவிர்க்கலாம், இதன் மூலம் காற்று மாசு குறைகிறது.

முடிந்த வரை எரிபொருட்கள் அதிகம் பயன்படுத்தும் தனி நபர் வாகனங்களை(அமெரிக்க போன்ற நாடுகளில் car pooling மிகவும் ப்ரபலமாகும்) தவிர்த்து சைக்கிள், பேருந்து, இரயில் போன்றவற்றை பயன் படுத்துவது மூலம் அதிக புகை, காற்று மாசு, புவி வெப்பமயம் ஆதல் ஆகியவற்றை தவிர்கலாம்.

தேவைக்கு அதிகமாக டிவி, கணினி, செல்போன், ஐபாட் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களை பயன் படுத்தாமை நன்று. இதன் மூலம் நம் கண்கள், காதுகள் பாதுகாக்க படுவதோடு, புவி வெப்பமயமாதலும் தவிர்க்க படுகிறது.


மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்க்களை(கடினமாக்க பட்ட ரப்பர், பிளாஸ்டிக், ரசாயனம் கலந்த அட்டைகள், ஜிகினா பேப்பரில் அமைந்த கிப்ட் பேப்பர்(இது பிளாஸ்டிக்கை விட ஆபத்தானது, மக்குவது மிகவும் கடினம்).

விளை நிலங்களில் ரசாயனங்களை பயன் படுத்தாமல் இயற்கை வழியில் வேளாண்மை செய்வது நன்று. ரசாயன உரங்கள் பயண்படுத்தாத இயற்கை உரங்கள் பயன் படுத்தி தயாரித்த ஆர்கானிக் தானியங்கள், உணவுகளை ஆதரிப்பதன் மூலம் ராசாயன உரங்களை தடுக்கலாம்.

மழை நீர்சேகரிப்பு(இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு அரசியல்வாதி கொண்டுவந்த ஒரே உருப்படியான திட்டம்- என் கருத்தில்) அமைப்பினை நமது வீடுகளில் ஏற்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை பேனவும் புவிவெப்பமயமாதலை தவிர்க்கவும் முடியும்.

எழுத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன சுற்றுசூழல் குறித்து, விரிவு அஞ்சி முடிக்கிறேன்.

முடிந்த வரையில் இயற்கை வழியில் வாழ்வோம், வாகண பயன்பாட்டை குறைப்போம், மழை நீரை சேகரிப்போம், மின் பயன்பாட்டை குறைப்போம், முடிந்த வரை மரங்களை வளர்த்து நம் பகுதியை வளமாக்குவோம். நாம் இருக்கும் பூமியை காக்க வேண்டியவர்கள் நாமே.

இந்த விஷயங்களை எழுத எனக்கு மிகவும் ஊக்கமும் ஆதரவும் அளித்த CLAP நிறுவனத்தின் இயக்குனர், Rev.Fr. அ.இன்னாசிCMF அவர்களுக்கு நன்றி.

Monday, August 16, 2010

அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்

முதல் முறையாக, என் சிந்தனைகளை தவிர வேறு தளத்தில இருந்து ஒர் செய்தியை எடுத்து தருகிறேன் விஷயத்தின் முக்கியத்துவம் கருதி.

நன்றி: தட்ஸ்தமிழ்.ஒன்இந்திய.இன்

ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் 'ஐஸ் மேன்' என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.

தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.

இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும் இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் நிருபர்களிடம் பேசுகையில்,

நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73 டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள் ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.

அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள் ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட் துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.

இந்த பனி உருகலால் உலகின் கடல் மட்டம் வி்ஞ்ஞானிகள் கூறியதை விட மிக வேகமாகவே உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் 2 மீட்டர் உயர்ந்தால் போதும், அது உலகின் பல்வேறு பகுதிகளை நீரி்ல் மூழ்கடித்துவிடும். இது மிக வேகமாகவே நடக்கப் போகிறது என்ற அபாயத்தை உணர்த்தவே நான் பனிப் பகுதிகளை விட்டுவிட்டு உலக நாடுகளை சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.

தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்த மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம் சேர்த்துள்ளார்.

கடும் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் கைகொடுக்கவே 1984ம் ஆண்டு சதர்ன் குவெஸ்ட் என்ற கப்பலை வாடகைக்கு எடு்த்துக் கொண்டு 3 மாதம் 15,000 மைல்கள் பயணித்து அண்டார்டிகாவை அடைந்துள்ளார். இவருடன் இரு நண்பர்களும் பயணித்தனர்.

அண்டார்டிகாவில் இந்த மூவரும் 1,400 கி.மீ. தூரம் நடந்துள்ளனர். வயர்லெஸ் உதவியோ, அவசரகால உதவியோ இல்லாமல் இவர்கள் 70 நாட்கள் நடந்துள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது. இதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தபோது அதிர்ந்து போயினராம்.

இவர்களது கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்கக் காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய சூரியக் கதி்ர்கள் என்று தெரியவந்ததாம்.

இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.
News From thatstamil.oneindia.in