Tuesday, January 17, 2017

வார்தை விளையாட்டுக்கள்

1.
ஆநிரை காத்தவன் ஆடிய ஆட்டமும் கூடாதோ!
மானிலம் காப்பவர் இயற்றிய சட்டமும் நாடாதோ!
மாயோனே நீயே பார்! சேயோனே நீயே கேள்!
வேந்தனே! வருணனே! வருவீரோ தடை தகர்க்க!
கொற்றவையே கொள்வாயோ சீற்றம்!
உன் பிள்ளைகள் காண ஏற்றம்.
(Jallikattu Ban)

2.

காசுக்கு ”கூத்தாடும் கலைஞரை” பாராட்டி போகாமல்

சீராட்டி சிங்காரித்து தலை மேல் தூக்கி வைத்து

தான் கூத்தாடியதால் நாசமானது நாடு. இன்று வரை

தொடருது அதன் கேடு.
(Ma.Go.Ra Centenary )

3.

நிஜமும் நிழலுமான த்வைதமாய்

நிழலும் நிஜமுமான அத்வைதமாய்

நிழல் நிஜமாகும் விஸிஷ்டாத்வைதமாய்

திகழும் ஒளி ஒவியர் திரு “ரகு ஸாய்” ஆம் ”ரகு ஸாய்” தான்

அவர்கள் மன நிறைவுடனும், மகிழ்வுடனும், செல்வம், புகழுடனும்

வாழ்வாங்கு வாழ .

(For Mr. Sai Raghunatha's Birthday 5th Jan 2017)

No comments:

Post a Comment