Friday, December 31, 2010

தமிழ் செம்மொழி பூங்கா- சென்னை

நேற்று மதியம் ஒரு பனி நிமித்தமாக அண்ணா சாலைக்கு சென்ற போது சிறிது நேரம் கிடைத்து அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள செம்மொழி பூங்காவை பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. இரு சக்கர வாகன கட்டனமாக 5 ரூபாய் வசூலிக்கிறார்கள். பூங்கா நுழைவு கட்டனம் 5 ரூபாய். தினசரி காலை நடை பயிற்சி செய்பவர்களுக்கு பூங்கா காலை 6-8மனி வரை திறக்க படுகிறது ஆனால் இதற்கு மாதன் 150 ரூபாய் கட்டனம் செலுத்தி மாதந்திர நுழைவு சீட்டு வங்கிக்கொள்ள வேண்டும்.

இது வேற!
நுழைவு சீட்டு வாங்கும் இடம்
மிகவும் மக்கள் நெருக்கடியும் வாகன போக்குவரத்தும் உள்ள சென்னை நகரின் இதயப்பகுதி போன்ற அண்ணா மேம்பால பகுதியில் இது போல இயற்கை சூழலுடன் கூடிய மூலிகை தோட்டம் இருப்பது மிகவும் மகிழ்சியான விஷயம்.
செம்மொழி பூங்கா அலுவலகம்
உள்ளே சிறுவர் சிறூமியர் விளையாட ஊஞ்சல் சறுக்கு மரம் போன்றவை
பொறுத்தப்பட்டுள்ளன, வந்திருந்த குழந்தைகள் அனைவரும் மிகவும் மகிழ்சியோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அழகிய குப்பைத்தொட்டியும் ஈரமான நாற்காலியும்
செடிகள் காய்ந்து விடாமல் இருக்க குறிப்பிட்ட கால இடைவேளைகளில்
தண்ணீர் Sprinkle செய்யபடுகிறது, இதனால் செடிகள் பசுமையாகவே பரமரிக்க படுகின்றன தூசும் மாசும் படியாமல். பூங்காவின் நடுப்பகுதியில்ஒரு நறுமனத் தோட்டம் அமைக்க பட்டு நறுமணம் வீசும் மலர்செடிகளும் மூலிகை செடிகளும் உள்ளன.

வாத்து குளத்தை சுத்தம் செய்யும் பனியாளர்கள்

கூரிய அல்லி
பல்வேறு வகையான மூலிகை செடிகள் இங்கே பயிரிடப்பட்டு இருக்கின்றன
ஒரு சில நமக்கு அறிமுகமான செடிகளும் உள்ளன. ஆங்காங்கே நீர் நிலைகள் அமைக்கப்பட்டு அவற்றில் வாத்து கூட்டங்களை நீந்த விட்டு இருப்பது அழகு.




தொங்கும் தோட்டம்?
பூங்கா நடுவிலிருந்து தெரியும் ராணி சீதை மன்றம்

அண்ணா மேம்பாலம் பூங்கவிலுருந்து
வந்து போகும் மக்களின் வசதிக்காக பூங்காவின் ஒரு ஓரத்தில் கழிவறைகளும் அமைக்க பட்டுள்ளன, இதையும் நன்றாகவே பரமரிக்கின்றனர். பூங்காவை இதே போல தொடர்ந்து பராமரித்து வந்தால் சென்னையின் தவிர்க்க முடியாத சுற்றுலா தலமாகிய கடற்கரை போலவே இதுவும் விளங்கும்.



Sterling Tower பின்னனியில்

பூவில் வண்டு? இல்லை இது ஈ

நறுமன தோட்ட வாயில்
சிறுவர்கள் விளையாட்டு
போன்ஸாய் மரங்கள்

பூங்காவில் நான்

சென்னை வாழ் மக்களும் சென்னைக்கு வருபவர்களும் கண்டிப்பாக வந்து
மகிழ வேண்டிய இடம் இந்த செம்மொழி பூங்கா.

wikipedia link தமிழில்.
படங்கள் நன்றி: திரு நவநீத கண்ணன்.

Tuesday, November 2, 2010

தீபாவளியும் மாசு கட்டுப்பாடும்


கீழே உள்ள விஷயங்களை துண்டு பிரசுரமாக நான் வசிக்கும் பகுதியில் வினியோகிக்க முயல்கிறேன். மக்கள் ஒத்துழைப்பார்களாக.

ஒலியினை குறைப்போம் செவியினை காப்போம்.

அன்பான வேண்டுகோள்

தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டு தன்மையையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிக ஓசையுடன் வெடிக்க கூடிய வெடிகளான நைட்ரஜன் வெடிகள், புல்லட் வெடிகள், எலக்ட்ரிக் வெடிகள் மற்றும் தொடர் சர வெடிகளை(1000,5000,10000 வாலாக்கள்) தவிர்த்து ஒளி அதிகம் தரக்கூடிய மத்தாப்பு வகைகளை பயன்படுத்தி கொண்டாடு வோம்.தீபாவளி பண்டிகையை கொண்டாடும் போது ”தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்” பொது மக்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பின் வரும் ஆலோசனைகளை வழங்குகிறது.
  • இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
  • குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம்.
  • பட்டசு வெடிக்கும் போது அருகிலேயே ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்தல் நலம்(எதிர்பாராமல் ஏற்படும் தீயினை அனைக்க).
  • பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை மாசினால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள். ஆஸ்துமா, ஒவ்வாமை(அலர்ஜி) போன்றவைகள் ஏற்படும் வாய்புகள் உள்ளன.
  • 120 டெசிபல் ஒலி அளவுக்கு கீழ் உள்ள பட்டசுகளை மட்டுமே பயன்படுத்துதல் நல்லது.
  • மருத்துவமனைகள், பள்ளிகள், நீதி மன்றங்கள் ஆகிய இடங்களில் வெடிகள் வெடிக்க கூடாது.


முடிந்த வரை குறைவான பட்டசுகளையே உபயோகிப்போம்.

இயன்ற வரை பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்போம், துனி பைகளை உபயோகிப்போம். மழை நீரை சேகரிப்போம். மரங்கள் நட்டு வளர்த்து மண் வளம் காப்போம்.


தீபாவளி பண்டிகயின் போது நமது கவணக்குறைவினாலும் அலட்சியத் தினாலும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட்டசுகளை தவிர்த்து மாசற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்.ஒலி மாசு ஓர் உயிர் கொல்லி புகை நமக்கு பகை.

குறிப்பு:-பொது நலம் கருதி தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் வினியோகித்த பிரசுரத்தை தழுவியது.


மக்களால் மக்களுக்காக


Friday, October 1, 2010

கடவுளும் வழிபாடும் அரசியலும்

நேற்று வந்த தீர்ப்பு திருப்தி அளித்திருக்கலாம் சிலருக்கு, அதிருப்தியும் அளித்திருக்கலாம் சிலருக்கு. இந்த விஷயத்தை பற்றி பலருக்கும் பல கருத்துகள் இருக்க கூடும், இந்த விஷயம் சர்சைக்கு உள்ளானது மசூதி கட்டபட்டதாக சொல்லப்பட்ட 1528ஆம் ஆண்டில் அல்ல, 1853ல் தான் முதல் தகராறு வந்துள்ளது, சுமார் 75 பேர் மடிந்துள்ளனர் கலவரத்தில். ஏறக்குறைய 325 ஆண்டுகள் அங்கே எந்த பிரச்சனையும் நடந்ததாக தகவல் இல்லை, அந்த காலகட்டம் முகலாயர் ஆட்சியாகவே இருந்த போதிலும்.

ஆனால் 1853ல் ஆங்கிலேயர் ஆட்சி கால கட்டம், ஆங்கிலேயரின் வழக்கமான பிரித்தாலும் கொள்கையின் அடிப்படையிலே இரு மதத்தை சேர்ந்தவர்களையும் மோத விட்டிகலாம், அந்த நெருப்பு அனையாமல் இருக்கிறது இன்றளவும்.

நடந்த வழக்கு அந்த சர்சைக்குறிய இடம் யாருக்கு சொந்தம் என்பது, அந்த அடிப்படையில் பார்க்கையில் பல நூறு ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக யார் அந்த ஊரில் அல்லது அந்த இடத்தின் அருகில் யார் குடி இருந்திருப்பார்களோ அவர்களுக்கு தான் அந்த இடம் சொந்தமாக இருக்க கூடும், அந்த வகையில் வழக்கு தொடுத்த எவருமே அந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற ஆதாரங்களை தரவில்லை. யாருக்கும் சொந்தமில்லா நிலத்தை நீதி மன்றம் மூன்றாக பங்கீடு செய்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு நல்ல வலிமை வாய்ந்த மக்கள் நலம் விரும்பும் அரசாங்கமாக இருந்தால் யாருக்கும் சொந்தம் இல்லாத அந்த நிலத்தை கையகப்படுத்தி இருக்க வேண்டும். சர்சை ஏற்படுத்தும் இரு சாரரும் விரும்புவது அந்த இடத்தில் வழிபாடு நடத்தவே, அது போலவே அந்த இடத்தில் எந்த மததின் சின்னங்களும் இல்லாமல் ஒரு பொதுவான தியான மண்டபம் அல்லது அது போன்றதொரு கூடத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். யார் வேண்டுமானலும் வரலாம் வழிபடலாம் ஆனால் மத சின்னங்கள் அங்கே கூடாது என.

அது போல அல்லமல் ஏதோ கட்டபஞ்சாயத்து போல ஒரு விஷயத்தை அறிவித்தி இருக்கிறார்கள். ப.ஜா.க அங்கே ராமர் கோவில் கட்டுவேன் என்கிறார்கள், ஒரு காங்கிரஸ்காரரோ அப்படியானல் அங்கே முஸ்லீம்கள் பாபர் மசூதி கட்டுவார்கள் என உசுப்பி விடுகிறார். மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வராமல் இருந்தால் சரி. மக்கள் நலனில் அக்கரை இல்லா அரசியலாலர்கள் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் முடிவுக்கு வரப்போவதில்லை.


எந்த கடவுளும் தன்னை வழிபட ஒரு இடம் ஏற்படுத்தி கொடுக்கும் படி யாரையும் கேட்கவில்லை. அப்படி ஒரு இடம் தேவைபட்டல் சர்வ வல்லமை பொருந்திய கடவுள் அதை ஏற்படுத்தி வைத்திருப்பார்.இதெல்லம் நாம் நமது வசதிக்காகவும் வேறு பல விஷய்ங்களுக்காகவும் ஏற்படுத்திக்கொண்டது. பிறக்கும் போது ஏதும் அறியாத குழந்தையாக தான் பிறக்கிறோம் செத்த பின்பும் ஏதும் அறியாமல் பிணமாக தான் கிடக்கிறோம். பிறந்தால் குழந்தை செத்தால் பிணம், மற்றதெல்லம் இடையில் வந்து இடையிலேயே போவது. மனிதர்களாக வாழ்வோம் இறுதி வரை.

Wednesday, September 1, 2010

வள்ளுவர் கோட்டம்: சென்னை

1976ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் குப்பை மேடாக இருந்த ஏரியின் நடுப்பகுதியில், திருவள்ளுவர் மேல் கொண்ட மாறாத பற்றினால் அன்றைய முதல்வர், கலைஞர் கருணாநிதியால், சிற்ப கலைஞர் கணபதி ஸ்தபதியை கொண்டு வடிவமைக்க பட்டு East Coast Constructions and Industries ஆல் உருவக்க பட்ட நினைவகம் வள்ளுவர் கோட்டம். ”குப்பையும் கோபுரமாகும் கோபுரமும் குப்பை ஆகும்” என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணமக இன்று விளங்குகிறது.

நுழைவாயிலில் இருந்து அரங்கமும், தேரின் மேல் பகுதியும்.




இந்தியன் வங்கி பராமரிப்பில் புல்வெளி


திருவாரூர் தேர்வடிவில்

திருவாரூர் தேரின்(திரு.கருணாநிதி பிறந்தது திருவாரூர் அருகில் தான்) மாதிரியில் அமைக்க பட்டுள்ள சிற்பத்தேர் அனைவரையும் மிகவும் கவரும். ஆசை ஆசையாக இந்த நினைவகத்தை வடிவமைத்து கட்டிய திரு. கருணாநிதி அவர்களுக்கு அதை திறந்து வைக்கும் வாய்ப்பு இல்லாமல் அவரது ஆட்சி கலைக்கபட்டு விட்டது, அவசர நிலை அறிவிக்க பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறை படுத்தபட்டது. . ஜனாதிபதி ஆட்சி செய்த காலத்தில் அன்றைய ஜனாதிபதி திரு. ஃபக்ருதீன் அலி அஹமத் அவர்களால் திறக்க பட்டது. பின்பு 13 ஆண்டுகள் கழித்து 1989ல் மீண்டும் முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட திரு.கருணாநிதி இதே வள்ளுவர் கோட்டத்தில் தான் பதவி ஏற்றுக்கொண்டார்





இந்த நினைவகத்தின் மற்றோர் சிறப்பு இங்குள்ள அரங்கம். தூன்களே இல்லாத இந்த அரங்கம் ஆசியாவின் மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றாகும். ஏறக்குறைய 4000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு களிக்க கூடிய வகையில் அமைந்த அரங்கமகும் இது. நான் சென்று பார்த போது இந்த அரங்கத்தில் வட கிழக்கு மாநிலங்களில் வடிவமைக்க பட்ட கலை பொருட்கள் காட்சி படுத்த பட்டிருந்தன. அழகான புல் வெளியும் மலை செடிகளும் இந்தியன் வங்கியால் உருவக்க பட்டு நன்கு பரமரிக்க படுகிறது.




தேரை சுற்றி அமைக்க பட்டுள்ள வேலியின் உறுதியை சோதிக்கும் சமூக ஆர்வலர்கள்





அரசியல் மறுதல்களால் பல்வேறு காலங்களில் பல்வேறு இன்னல்களையும், பராமரிப்புகளையும் சந்தித்த இந்த வள்ளுவர் கோட்டத்தின் இன்றைய நிலையும் அப்படி ஒன்றும் மெச்சும்படி இல்லை, இப்போது நடப்பது திரு,கருனாநிதியின் ஆட்சியாகவே இருந்தாலும். இன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய ”மண்ணார் & கம்பெனி” போல சில இடங்களிலும், காதல் விளையாட்டுக்கள் அரங்கேரும் இடமாகவும், குப்பை கூளம் சில இடங்களிலும், காண சகிக்க முடியாமல் உள்ளது. ஒரு அழகிய குளம் பராமரிப்பின்றி அழுக்கு குட்டையாக காட்சியளிக்கிறது. இதையெல்லம் மீறி ஒரு சில சுற்றுலா பயனிகளும் வரத்தான் செய்கிறார்கள். முதல்வர் அவர்கள் தன் பல்வேறு பனிகளுக்கிடயே தான் உருவாக்கிய இந்த நினைவகத்தையும் கவனித்து பராமரிக்க செய்தால் நன்றாக இருக்கும். எல்ல வித காட்சிகளையும் படம் பிடித்தாலும் நல்ல விஷங்களையே உங்கள் காட்சிக்கு வைத்திருக்கிறேன்

எது எப்படியோ சென்னை மாநகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கடந்த 35ஆண்டுகளாக விளங்குகிறது இந்த வள்ளுவர் கோட்டம்.
நன்றி:விக்கீபீடியா