Friday, October 1, 2010

கடவுளும் வழிபாடும் அரசியலும்

நேற்று வந்த தீர்ப்பு திருப்தி அளித்திருக்கலாம் சிலருக்கு, அதிருப்தியும் அளித்திருக்கலாம் சிலருக்கு. இந்த விஷயத்தை பற்றி பலருக்கும் பல கருத்துகள் இருக்க கூடும், இந்த விஷயம் சர்சைக்கு உள்ளானது மசூதி கட்டபட்டதாக சொல்லப்பட்ட 1528ஆம் ஆண்டில் அல்ல, 1853ல் தான் முதல் தகராறு வந்துள்ளது, சுமார் 75 பேர் மடிந்துள்ளனர் கலவரத்தில். ஏறக்குறைய 325 ஆண்டுகள் அங்கே எந்த பிரச்சனையும் நடந்ததாக தகவல் இல்லை, அந்த காலகட்டம் முகலாயர் ஆட்சியாகவே இருந்த போதிலும்.

ஆனால் 1853ல் ஆங்கிலேயர் ஆட்சி கால கட்டம், ஆங்கிலேயரின் வழக்கமான பிரித்தாலும் கொள்கையின் அடிப்படையிலே இரு மதத்தை சேர்ந்தவர்களையும் மோத விட்டிகலாம், அந்த நெருப்பு அனையாமல் இருக்கிறது இன்றளவும்.

நடந்த வழக்கு அந்த சர்சைக்குறிய இடம் யாருக்கு சொந்தம் என்பது, அந்த அடிப்படையில் பார்க்கையில் பல நூறு ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக யார் அந்த ஊரில் அல்லது அந்த இடத்தின் அருகில் யார் குடி இருந்திருப்பார்களோ அவர்களுக்கு தான் அந்த இடம் சொந்தமாக இருக்க கூடும், அந்த வகையில் வழக்கு தொடுத்த எவருமே அந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற ஆதாரங்களை தரவில்லை. யாருக்கும் சொந்தமில்லா நிலத்தை நீதி மன்றம் மூன்றாக பங்கீடு செய்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு நல்ல வலிமை வாய்ந்த மக்கள் நலம் விரும்பும் அரசாங்கமாக இருந்தால் யாருக்கும் சொந்தம் இல்லாத அந்த நிலத்தை கையகப்படுத்தி இருக்க வேண்டும். சர்சை ஏற்படுத்தும் இரு சாரரும் விரும்புவது அந்த இடத்தில் வழிபாடு நடத்தவே, அது போலவே அந்த இடத்தில் எந்த மததின் சின்னங்களும் இல்லாமல் ஒரு பொதுவான தியான மண்டபம் அல்லது அது போன்றதொரு கூடத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். யார் வேண்டுமானலும் வரலாம் வழிபடலாம் ஆனால் மத சின்னங்கள் அங்கே கூடாது என.

அது போல அல்லமல் ஏதோ கட்டபஞ்சாயத்து போல ஒரு விஷயத்தை அறிவித்தி இருக்கிறார்கள். ப.ஜா.க அங்கே ராமர் கோவில் கட்டுவேன் என்கிறார்கள், ஒரு காங்கிரஸ்காரரோ அப்படியானல் அங்கே முஸ்லீம்கள் பாபர் மசூதி கட்டுவார்கள் என உசுப்பி விடுகிறார். மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வராமல் இருந்தால் சரி. மக்கள் நலனில் அக்கரை இல்லா அரசியலாலர்கள் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் முடிவுக்கு வரப்போவதில்லை.


எந்த கடவுளும் தன்னை வழிபட ஒரு இடம் ஏற்படுத்தி கொடுக்கும் படி யாரையும் கேட்கவில்லை. அப்படி ஒரு இடம் தேவைபட்டல் சர்வ வல்லமை பொருந்திய கடவுள் அதை ஏற்படுத்தி வைத்திருப்பார்.இதெல்லம் நாம் நமது வசதிக்காகவும் வேறு பல விஷய்ங்களுக்காகவும் ஏற்படுத்திக்கொண்டது. பிறக்கும் போது ஏதும் அறியாத குழந்தையாக தான் பிறக்கிறோம் செத்த பின்பும் ஏதும் அறியாமல் பிணமாக தான் கிடக்கிறோம். பிறந்தால் குழந்தை செத்தால் பிணம், மற்றதெல்லம் இடையில் வந்து இடையிலேயே போவது. மனிதர்களாக வாழ்வோம் இறுதி வரை.