Wednesday, May 19, 2010

செம்மொழி மாநாடும் தமிழ் இசையும்

முத்தமிழ் “வித்””தகர்” எழுத்தில், அடித்து நொறுக்கும் ”புயல்” இசையில், தமிழ் இசையோடு பல்வேறு உலக இசை வடிவங்களும் கலந்து பல்வேறு மொழியினரின் குரல்களோடு தமிழின் பெருமையை தமிழரின் பெருமையை ”பறை” சாற்ற வந்திருக்கும் பாடலை இங்கே கேளுங்கள்.



சாதரன ஜன ரஞ்சக பாடாலக இந்த பாடலில் குறை ஏதும் இல்லை. ஆனால் இயல்,”இசை”, நாடகம் என தொன்றுதொட்டு இருக்கும் தமிழின் பெருமை இந்த பாடலில் சொல்லப்பட்டு இருக்கிறதா? தமிழரின் பன்டைய இசை கருவிகள், பண்கள், பயன் படுத்த பட்டிருக்கிறதா? பயன்படுத்த பட்டிருந்தாலும் அவற்றின் ஒலி அளவு மேலோங்கி இருகிறதா? ஏதோ ஒரு POP பாடலை போல இசை அமைக்க பட்டிருகிறது.

ஒரு செயலை விரும்பி செய்தால் அது சிறப்பான செயலாக பலன் அளிக்கும், ஒருவரை தன் பதவியை கொண்டு அழுத்தம் கொடுத்து ஒரு செயலை செய்ய சொன்னால் அது இப்படித்தான் இருக்கும், இவரின் கதை வசனம் எழுதிய படத்திற்கு வேறு புயலை இசையமக்க சொல்லி தொந்தரவு, கலைஞர்களை தொந்தரவு செய்தால் நல்ல படைப்பு எப்படி வெளிவரும், இது ”கலைஞர்” என சொல்லி கொள்பருக்கு தெரியாதா? அம்மா தான் வளைப்பு மகன் திருமண விழாவில் கச்சேரி செய்ய வைதார் என்றால் இவருமா?

இன்னோரு கொடுமை என்னவென்றால், இந்த பாடலை காட்ச்சி படுத்த போகிறவர் “கொளதம் வாசுதேவ மேனன்”. தன் திறைபடங்களில் தன் மாநில கலாசாரத்தை நடு நடுவே கலந்து தமிழில் அதை விற்பவர். காக்க காக்க படத்தில் நாயகன் நாயகி திருமனம், நாயகியின் பெயர். வேட்டையாடு விளையாடு நாயகியின் பெயர், வாரனம் ஆயிரம் படத்தில் பல காட்சிகள், சமீபத்தில் விண்னை தாண்டி வருவாயா கேரள நாயகி மற்றும் கேரள சூழல்.இவை உதாரணங்கள். இந்த லட்சனத்தில் வாரணம் ஆயிரம் சிறந்த தமிழ் படம் என விருது.

ஏன் செம்மொழி மாநாட்டின் பாடலுக்கு இசை அமைக்கவும் காட்சி படுத்தவும் எந்த மானமுள்ள தமிழனும் ஒப்பு கொள்ள வில்லையா? ஓ அவர்கள் மானத்தோடு துக்கம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்களோ?

Thursday, May 13, 2010

விஜய்டிவி : சிறுவர்களின் இசைமழை

விஜய் டிவியில் Airtel Super Singer Junior என ஒரு இசை நிகழ்ச்சி நடப்பது அனேகமாக எல்லோருக்கும் தெரிந்து இருக்கும், சிறுவர் சிறுமியர் போட்டியாளர்களாக பங்கு பெற்று அசத்தும் நல்லதொரு இசை நிகழ்ச்சி, சமீபதிதில் நடந்த அரையிறுதி போட்டிகளில் பாடிய குழந்தைகள் பெரியவர்களே வியக்கும் வன்னம் அசத்தலாக பாடினர், குறிப்பாக அல்கா, நித்யஸ்ரீ, ரோஷன். பாடல்களின் பின்னனி இசையும் புதுமையாக இசைக்க பட்டு விதியாசமாகவும் அழகாகவும் இருந்தது, REMIX என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல. அவர்கள் பாடிய சில பாடல்கள் உங்களுக்காக:-

அல்கா அஜித் குரலில் நினைக்க தெரிந்த மனமே:



ரோஷன் குரலில் அந்தி மழை:



நித்யஸ்ரீ குரலில் அடுத்தாத்து அம்புஜம்


ஸ்ரீநிஷா குரலில் இரு பறவைகள்:



மேலும் சில கானங்கள்

ராஜாவின் பார்வை:அல்கா


பளிங்கினால் ஒரு மாளிகை: நித்யஸ்ரீ


நீலவான ஓடையில்:ரோஷன்


மடை திறந்து:ஷ்ரவன்


மச்சான பாத்தீங்கள:நித்யஸ்ரீ


குங்கும பூவே:ஸ்ரீனிஷா


எங்கேயும் எப்போதும்: ஷ்ரவன்


எலந்த பயம்: ஸ்ரீனிஷா


பாடல்களை கேட்டு மகிழ்ந்து குழந்தைகளை ஆசிர்வதியுங்கள். இந்த நிகழ்சிகளின் கானொளிகள்
tamilrain.com என்ற தளத்தில் பார்க்கலாம்.