Saturday, August 28, 2010

சுற்றுபுற சூழலை நாமே காக்க வேண்டியவர்கள்நமது சுற்றுபுற சூழலை நாமே காக்க வேண்டியவர்கள், ஏனெனில் அதை கெடுத்தவர்களும் நாமாகிய காரணத்தால். அவர்கள் செய்த தவறால் தான் இந்த பகுதி கெட்டுபோனது, அந்த நிறுவனம் இந்த பகுதியில் வந்ததால் தான் இந்த பகுதி கெட்டுபோனது, நீ / அவன் செய்யும் தவறுகளால் தான் இந்த பகுதி சீரழிகிறது என ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்ளாமல், இதற்கான காரனம், நானாக, என் குடும்பதினராக, என் சுற்றத்தாராக, என் நன்பர்களாக, நான் வசிக்கும் பகுதியுள் வசிக்கும் மக்களாக இருக்கலாம் என நாம் ஏன் நினைக்க கூடாது? மூன்றாவது நபர் மாறவேண்டும், தவறுகள் செய்ய கூடாது என நினைப்பதை விட, நான் எவ்வாறு சுற்றுசூழலை பாதிப்படைய செய்யாமல் இருக்க முடியும், எவ்வாறு பாதுகாக்க முயற்சி எடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து செயல் பட்டால் நலம் அல்லவா?

சுற்று சூழலை பாதிக்கும் முக்கிய காரணங்கள் சில:
அளவுக்கு அதிகமான ஒலி, அளவுக்கு அதிகமான புகை, அளவுக்கு அதிகமான கழிவுகள், அதிக அளவிலான ரசாயனங்கள் பயன்பாடு.


அதிக வாகணங்கள் பயன் பாட்டினால் ஏற்படும் ஒலி(எ.க. சென்னை பெரு நகரின் உள்ளே இருக்கும் டெசிபல் அளவுக்கும் புறநகர் பகுதிகளில் இருக்கும் டெசிபல் அளவுக்கும் நிறைய வேறுபாடு இருக்கும்). வாகணங்கள் பயண்பாட்டினை குறைப்பதன் மூலம் இதை தவிற்க முடியும்.

திருவிழாகாலங்களில், கோவில்களில், தேவாலையங்களில், மசூதிகளில், குருத்வாரக்களில், நம் வீடுகளில் நடை பெரும் கொண்டாட்டங்களில்,உபயோகிக்கப்படும் ஒலிப்பெருக்கிகள் ஏற்படுத்தும் பேரொலிகளிகளை குறைத்தல் மூலம் இவற்றை தவிர்க்கலாம்.

நாம் உபயோகிக்கும் இரண்டு, மூன்று,நாண்கு சக்கர வாகனங்களையும் புகை மிகுதியாகவும் வெளியிடும் இயந்திரங்களையும் தகுந்த காலங்களில்/சீரனா கால இடைவெளிகளில் பராமரித்தும் பழுதுகளை சீரமைப்பதன் மூலமும் புகையை தவிர்க்கலாம், இதன் மூலம் காற்று மாசு குறைகிறது.

முடிந்த வரை எரிபொருட்கள் அதிகம் பயன்படுத்தும் தனி நபர் வாகனங்களை(அமெரிக்க போன்ற நாடுகளில் car pooling மிகவும் ப்ரபலமாகும்) தவிர்த்து சைக்கிள், பேருந்து, இரயில் போன்றவற்றை பயன் படுத்துவது மூலம் அதிக புகை, காற்று மாசு, புவி வெப்பமயம் ஆதல் ஆகியவற்றை தவிர்கலாம்.

தேவைக்கு அதிகமாக டிவி, கணினி, செல்போன், ஐபாட் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களை பயன் படுத்தாமை நன்று. இதன் மூலம் நம் கண்கள், காதுகள் பாதுகாக்க படுவதோடு, புவி வெப்பமயமாதலும் தவிர்க்க படுகிறது.


மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்க்களை(கடினமாக்க பட்ட ரப்பர், பிளாஸ்டிக், ரசாயனம் கலந்த அட்டைகள், ஜிகினா பேப்பரில் அமைந்த கிப்ட் பேப்பர்(இது பிளாஸ்டிக்கை விட ஆபத்தானது, மக்குவது மிகவும் கடினம்).

விளை நிலங்களில் ரசாயனங்களை பயன் படுத்தாமல் இயற்கை வழியில் வேளாண்மை செய்வது நன்று. ரசாயன உரங்கள் பயண்படுத்தாத இயற்கை உரங்கள் பயன் படுத்தி தயாரித்த ஆர்கானிக் தானியங்கள், உணவுகளை ஆதரிப்பதன் மூலம் ராசாயன உரங்களை தடுக்கலாம்.

மழை நீர்சேகரிப்பு(இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு அரசியல்வாதி கொண்டுவந்த ஒரே உருப்படியான திட்டம்- என் கருத்தில்) அமைப்பினை நமது வீடுகளில் ஏற்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை பேனவும் புவிவெப்பமயமாதலை தவிர்க்கவும் முடியும்.

எழுத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன சுற்றுசூழல் குறித்து, விரிவு அஞ்சி முடிக்கிறேன்.

முடிந்த வரையில் இயற்கை வழியில் வாழ்வோம், வாகண பயன்பாட்டை குறைப்போம், மழை நீரை சேகரிப்போம், மின் பயன்பாட்டை குறைப்போம், முடிந்த வரை மரங்களை வளர்த்து நம் பகுதியை வளமாக்குவோம். நாம் இருக்கும் பூமியை காக்க வேண்டியவர்கள் நாமே.

இந்த விஷயங்களை எழுத எனக்கு மிகவும் ஊக்கமும் ஆதரவும் அளித்த CLAP நிறுவனத்தின் இயக்குனர், Rev.Fr. அ.இன்னாசிCMF அவர்களுக்கு நன்றி.

Monday, August 16, 2010

அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்

முதல் முறையாக, என் சிந்தனைகளை தவிர வேறு தளத்தில இருந்து ஒர் செய்தியை எடுத்து தருகிறேன் விஷயத்தின் முக்கியத்துவம் கருதி.

நன்றி: தட்ஸ்தமிழ்.ஒன்இந்திய.இன்

ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் 'ஐஸ் மேன்' என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.

தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.

இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும் இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் நிருபர்களிடம் பேசுகையில்,

நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73 டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள் ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.

அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள் ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட் துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.

இந்த பனி உருகலால் உலகின் கடல் மட்டம் வி்ஞ்ஞானிகள் கூறியதை விட மிக வேகமாகவே உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் 2 மீட்டர் உயர்ந்தால் போதும், அது உலகின் பல்வேறு பகுதிகளை நீரி்ல் மூழ்கடித்துவிடும். இது மிக வேகமாகவே நடக்கப் போகிறது என்ற அபாயத்தை உணர்த்தவே நான் பனிப் பகுதிகளை விட்டுவிட்டு உலக நாடுகளை சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.

தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்த மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம் சேர்த்துள்ளார்.

கடும் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் கைகொடுக்கவே 1984ம் ஆண்டு சதர்ன் குவெஸ்ட் என்ற கப்பலை வாடகைக்கு எடு்த்துக் கொண்டு 3 மாதம் 15,000 மைல்கள் பயணித்து அண்டார்டிகாவை அடைந்துள்ளார். இவருடன் இரு நண்பர்களும் பயணித்தனர்.

அண்டார்டிகாவில் இந்த மூவரும் 1,400 கி.மீ. தூரம் நடந்துள்ளனர். வயர்லெஸ் உதவியோ, அவசரகால உதவியோ இல்லாமல் இவர்கள் 70 நாட்கள் நடந்துள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது. இதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தபோது அதிர்ந்து போயினராம்.

இவர்களது கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்கக் காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய சூரியக் கதி்ர்கள் என்று தெரியவந்ததாம்.

இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.
News From thatstamil.oneindia.in

Sunday, August 15, 2010

இந்திய திரு நாட்டின் 64ம் விடுதலை நாள்

இந்திய திரு நாட்டின் 64ம் விடுதலை நாளை நான் வசிக்கும் பகுதி மக்கள் சீரோடும் சிறப்போடும் 2 நாட்க்கள் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். 14-08-2010 அன்று நகர் சிறுவர்கள் கலை நிகழ்ச்சியும், நகர் மாந்தர்கள் நடித்த நாடகமும் நடைபெற்றது.

15-08-2010 ஆம் நாள் இந்திய விடுதலை நாளை, ஊராட்சி மண்ற தலைவர் உயர் திரு. M.D.லோகநாதன் தலைமயில் நாட்டுக்கொடி ஏற்றி கொண்டாடிய நமது நகர் மாந்தர்கள், ஒரு முக்கிய நிகழ்வாக, புவியின் வெப்பத்தை குறைத்திடவும், பூமித்தாயை காத்திடவும் உறுதி எடுத்தனர். சென்னை CLAP(http://clapindia.blogspot.com/2009/03/claretian-life-animation-project.html) நிறுவனத்தின் வழிகாட்டுதலில், சண்முகா நகர் & விரிவு மற்றும் திருவேங்கடம் நகர் குடியிருப்போர்பொது நல சங்கம், சுதந்திர தின நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சுற்று சூழல் விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சியை ஏற்ப்படு செய்து இருந்தது.

தோண்றிய 450 கோடி ஆண்டுகளாக நலமாக இருந்த பூமி சமீபகாலமாக மிகவும் மாசு அடந்து வருகிறது, தண்ணீர், காற்று, மண் ஆகியவை மாசடந்து மிகவும் மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிண்றன. ஆகவே சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு குறித்து பல் வேறு விஷயங்கள் விளக்கப்பட்டன, அவற்றில் சில:-

தண்ணீர் மாசு:

உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தூய குடி நீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

அறிவியல் அறிஞர்கள் கருத்துப்படி 2025ல் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு தூய குடிநீர் கிடைப்பது அரிது.

தூய நீர், பூச்சி கொல்லி மருந்து, தொழிற்சாலை கழிவுகளால் மசடைந்துள்ளது.

இன்று ஒவ்வோர் இந்தியனும் 2 மில்லி கிராம் நச்சு பொருளை தன் உடலின் ஒவ்வொரு கிலோவிலும் சுமக்கிறான்.

மரங்கள் வளர்பதின் அவசியம்:

ஒரு மனிதன் சுவாசிக்க 16 பெரிய மரங்கள் தேவை ஆனால் இந்தியாவில் 36 மனிதர்கள் ஒரு மரத்தை பகிர்ந்துகொள்கின்றனர்.

மரங்கள் நிலத்தில் நீரை சேமிக்கின்றன. மரத்தின் வேர்கள் 33 சதவீதம் மழை நீரை சேமித்து வைக்கின்றன, எனவே

மரங்கள் இல்லை என்றால் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வரும்.

இந்தியா சீனா போன்ற நாடுகளில் பெரும்பாலன இடங்களில் ஆண்டுக்கு 1 1/2 மீட்டர் வீதம் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது.

காற்று மாசு:

மாசு பட்ட காற்றினால் சுமார் 22 லட்சம் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் மடிகின்றனர், அதிகரித்து வரும் வாகனங்களும் தொழிற்சாலைகளும் இதற்கு காரணம்.

பூமியிலிருந்து சுமார் 5 அடி உயரம் வரை காற்று மிகவும் மாசடைந்துள்ளது, எனவே காற்று மாசினால் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மாசடைந்துள்ள காற்றினால் பூமி மிகவும் வெப்பம் அடைகின்றது.

புவி வெப்பம் 3 டிகிரி உயர்ந்தால் காடுகள் பாதிக்கும் மேல் அழிந்து சிதைந்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடதுவங்கும்.

வெப்பம் காரனமாக வட தென் துருவங்க்களில் பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் உயரும். கடல் மட்டம் உயர்வதால் பல தீவுகள் காணாமல் போகும்.
உலகில் உள்ள கடற்கரையோர பகுதிகள் கடலில் மூழ்கி விடும்.

கடல் நீர்மட்டம் 1 மீட்டர் உயர்ந்தால் கடலோர பகுதிகளில் உள்ள 4 முதல் 8 கோடி மக்கள் வேறிடங்களுக்கு சென்றாக வேண்டும்.


மண் மாசு:


பூமியின் மேல் பகுதியில் உள்ள முதல் 6 அங்குல மண் தான் வளமானது.

மரங்கள் வெட்ட படுவதால் இந்த மண் மழை நீரினால் அடித்து செல்ல படுகிறது.

மேலும் பல தேவைகளுக்கு பூமியின் மேற்பரப்பில் உள்ள மண்ணை பயன் படுத்துவதால், நிலம் விவசாயத்திற்க்கு பயன் படாமல் போகிறது.

விவசாய நிலத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன் படுத்துவதால் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு நிலம் பயனற்று போகிறது.

ஒவ்வொரு நாட்டிற்க்கும் 33% நிலம் காடு வளர்பிக்கு தேவை படுகிறது.

இந்தியாவில் உள்ள மொத்த நிலத்தில் 10.5 % தான் காடுகள் உள்ளன.

இவற்றை தவிற்க பூமி தாயை காக்க மக்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழி:-

மரங்கள் வளர்ப்போம்.

எரி பொருட்க்கள் பயன்பாட்டை குறைப்போம்.

தேவையற்ற வாகன பயன்பாட்டை குறைப்போம்.

வாகனங்களை நஙு பராமரித்து வாகன புகையை குறைப்போம்.

பிளாஸ்டிக் பொருட்க்களின் பயன்பாட்டை தவிர்ப்போம்.

துணி காகிதம் மற்றும் சணல் பைகளை பயண்படுத்துவோம்.

தொண்ணை காகிதம் மற்றும் சணல் டம்ளர்களை பயன்படுத்துவோம்.

கழிவுகள் அதிகரிப்பதை தவிர்ப்போம்.

கழிவுகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை தரம் பிரிப்போம்.

காகிதம் போன்ற ஒருமுறை பயன்படுத்திய பொருட்க்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம்.

சுற்றுபுற சூழலுக்கு நன்மை பயக்கும் பரிசு பொருட்களை பிறருக்கு கொடுப்போம்.

பரிசுகளை சுற்றி கட்ட(கிஃப்ட் பேப்பர்) காகிதங்களையே(பிளாஸ்டிக் ஷீட் தவிர்த்து) பயன்படுத்துவோம்.

முக்கியமாக பொது இடங்களில் மரம் வளர்ப்போம்.


15ம் தேதி மாலையில் திரை இசை பாடல்கள் அந்தி மழை குழுவினரால் பொழியப்பட்டன.

Wednesday, August 11, 2010

சுதந்திர தினம் 2010 ஆகஸ்ட் 15

http://shanmuganagar.blogspot.com/2010/08/14-15.html
சுதந்திர தினம் 2010 ஆகஸ்ட் 15

சுதந்திர தினத்தை கொண்டாட முயற்சித்து கொண்டிருக்கிறோம் நாங்கள் வசிக்கும் பகுதியில்(சண்முகாநகர்- மண்ணிவக்கம், சென்ணை 48), சுற்று சூழல் பாதுகாப்பு பற்றி ஒர் நிகழ்ச்சி நடத்த முயற்சி எடுத்து வருகிறேன், 14 மற்றும் 15ம் தேதிகளில் விழாக்களும் கொண்டாட்டங்களும் நகரில் நடை பெறும், முடிந்தால் கலந்து கொள்ளுங்கள்.
Posted by K at 4:08:00 PM
2 comments:

Karthik said...
Sutru Suzhal periya Subject, enna pannradha uthesam ?

Ungal Muyarchi Vetri adaya Vaazthukkal !

10 August 2010 5:12 PM
krubha said...
சுற்று சூழல் பாதுகாப்பு பற்றிய சில சிறிய விளக்கங்களை வாசித்து அந்த விஷயங்கள் அடங்கிய ஒரு pampletஐ மக்களுக்கு வினியோகிக்க முயற்சி எடுத்துள்ளேன், ஆனால் அதிலும் சில தடங்கல்கள், சில அகம்(ego) பிடித்த மனிதர்களை சமாளிக்க வேண்டியுள்ளது, இதை எல்லம் தாண்டி இந்த விஷயத்தை மக்களிடம் சேர்க்க முயற்சிக்கிறேன், சோதணைகளை தாண்டித்தானே சாதணை. இங்கே இந்த சின்ன விஷயத்திற்கே சோதணைகளை சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்க மனிதர்களில் அகம்(EGO).

11 August 2010 7:24 AM
Post a Comment