Monday, January 25, 2010

இசை வியாபாரம், விருதுகள்=கேலிக்கூத்து


சமீபத்தில் திரு இளையராஜா அவர்கள் ”அகி”(www.agimusic.com/Agi_Music/Agi_Music.html)இசை நிறுவத்திற்கு தான் 2000ம் ஆண்டிற்கு முன்னதாக இசைஅமைத்த பாடல்கள் இசை தொகுப்புகள் ஆகியவற்றிற்கான உரிமையை தந்திருப்பதாக அறிவித்திருந்தார். நம்மில் பலர் திரு.ராஜாவின் பாடல்களை விரும்பி கேட்க்கிறோம், பெரும்பாலானோர் இனையத்தில் இருந்து தான் டவுன்லோட் செய்து கேட்கிறோம்.திரு இளையராஜா அவர்களின் இசை தொகுப்புகள் பெரும்பான்மையும் இனையத்தில் இலவசமாக கிடைப்பதால் என் போன்ற நல் இசை விரும்பிகள் அவற்றை இனையத்தில் இருந்தே டவுன்லோட் செய்து கொள்கிறோம். இவற்றில் பல நேரம் ஒலி அமைப்பு நல்ல தரத்தில் இல்லாமல் இருந்தாலும் ராஜாவின் இசை மீது உள்ள காதலால் இவற்றையே கேட்க்க வேண்டி இருக்கிறது.

திரு ராஜா அவர்களின் இசை ஒப்பந்ததை கேள்வியுற்று ”அகி” யின் தளத்திற்க்கு சென்று இசை தொகுப்புகள் என்ன இருக்கின்றன என பார்க்க சென்றபோது சில பழைய பாடல்கள்களின் sampleகள் தரப்பட்டிருந்தன. டவுன்லோட் செய்து கேட்ட போது ஒலி தரம் இல்லாத்தாகவே இருந்தது. ரசிகர்கள் பணம் கொடுத்தும் ஒலி தரமில்லாதா பாடல்களையே கேட்க வேண்டியதாக உள்ளது. அகி நிறுவனம் கண்டிப்பாக பெரும் பணம் கொடுத்தே உரிமையை வாங்கி இருக்கும் என என்னுகிறேன்.

இன்று தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேரி இருக்கிறது, என்னென்னவோ மென் பொருட்க்கள் வந்துள்ளன ஒலி மேம்பாட்டிற்காக, இன்றைய சூழலில் consumer deserves quality for the money he spends, என் வேண்டுகோள் அகி நிறுவனம் ராஜாவின் பொற்கால இசை பாடல்களை, ஒசை தொகுப்புகளை Digital remaster செய்து ஒலி மேம்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்பதே. Original CD வாங்கி கேட்ப்பவர்கள் கண்டிப்பாக வாங்கி கேட்பார்கள், என் போன்றோரிடமும் Original CD வாங்க வேண்டும் என்ற என்னமும் வரும்.

ராஜாவின் பழைய பாடல்களை ஒலி மேம்படுத்துதல் சாத்தியமே என்பதற்க்காக இனையத்தில் கிடைக்கும் சில இலவச மென்பொருட்களை கொண்டு சோதனை முயற்ச்சியாக சில பாடல்களை ஒலி மேம்படுத்தியுள்ளேன் கீழ் காணும் தளம் சென்று டவுன்லோட் செய்து கேட்டுவிட்டு கருத்து சொல்லுங்கள் (www.mediafire.com/?sharekey=72e83c5d7e9ce7fe0c814df2efeadc501b072273bf6c0a61935cbde7375ca78c)


இனி விருதுகள்:-

சென்ற ஆண்டிற்கான சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்க பட்டுள்ளன, நான் கடவுள் படத்திற்கு திரு.பால சிறந்த இயக்குனராகவும், வாரணம் ஆயிரம் படம் சிறந்த படமாகவும் தேர்தெடுக்க பட்டுள்ளன. முதலில் நான் கடவுள், வழக்கத்தில் இருந்து மாறுபட்ட படங்களையே எடுக்கும் பாலாவின் படைப்பு, பாலாவின் மீதும் மேலும் படத்தின் தலைபின் மீதும் கொண்டிருந்த எதிர் பார்ப்பில் முதல் நாளே சத்தியம் திரை அரங்கில் சென்று பார்த்த படம், படம் பார்த்த பின் எனக்கு தோன்றியது இது முழுமையான படப்பு அல்ல,ஆங்காங்கே வெட்டப்பட்டு இருப்பதாக தோன்றியது, காரனம் படதிற்கு தயாரிப்பில் இருகும் போதே அவர்கள் செய்த செய்தி விளம்பரங்கள். என்னை பொருத்தவரை திரையில் காண்பிக்க பட்ட படம் அரைவேக்காடு. அரைவேக்காட்டிற்கே சிறந்த இயக்குனர் விருது என்றால்?!!!!!!!!!!!!

கெளதம்,கெளதம் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன் என பரினாம வளர்ச்சி பெற்ற ஒரு இயக்குனரின் படைப்பு, அவருக்கு அவரது தந்தையின் மேல் மிகுந்த பிரியம், அவரது மரணத்திற்கு பிறகு அவரது வாழ்கையை திரையில் படமாக்க என்னி அவசரகோலத்தில் சமைத்த அரைவேக்காட்டு படம்(படத்தில் சில நல்ல விஷயங்கள் இருந்தும்). இயக்குனர் இன்னும் ஓர் 5 ஆண்டுகள் தன் தந்தையின் வாழ்கையை மனதில் அசை போட்டு பிறகு திரைப்படமாக எடுத்திருந்தால் மிகவும் அருமையான திரை காவியாமக வந்திருக்கும். நம் தமிழகத்தின் தலை விதி இது தான் சிறந்த படமாம்.

இன்னொரு செய்தி படித்தேன், முனைவர் பட்டத்தின் மரியாதையை கெடுத்தது போதாதென்று பத்மஸ்ரீ பட்டம் வேறாம், நடிகர் விஜய் அவர்களுக்கு. இதெல்லாம் கேலிக்கூத்தில்லாமல் வேறென்னவாம்.

அனைவருக்கும் குடியரசு திருநாள் வாழ்துகள்.ஜெய் ஹிந்த்.


சற்று முன்(மாலை 4 மணி) கிடைத்த தகவல் ஒன்று, நான் கடவுளுக்கு கிடைத்த 2 வது விருது திரு மூர்த்தி அவர்களுக்கு தரப்பட்டுள்ளது சிறந்த்த ஒப்பனை கலைஞர் என்று, படத்தில் பணியாற்றிய நன்பர் ஒருவர் சொன்னார் திரு மூர்த்தி அவர்கள் Costumer என்று. இப்போது சொல்லுங்கள் கேலிக்கூத்து தானே?

Friday, January 22, 2010

வித்யாபாலன்-பி.சி.ஸ்ரீராம்-இளையராஜ-பா....

நேற்று திரு.பால்கி அவர்கள் இயக்கிய ”பா” படம் பார்க்க நேர்ந்தது, மனித உணர்வுகளை நுட்பமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் காண்பித்து இருக்கும் படம். திரு இளையராஜா அவர்களின் இசைக்காவே இந்த படத்தை பார்க்க தேர்ந்தெடுத்தேன், மிகவும் சிறப்பாக செய்திருந்தார், கதையின் சூழலுக்கேற்பான இசை. தென்றல் காற்று உடலுக்கும் மனதுக்கும் இதம் அளித்தது என்பது போல இந்த் படத்தின் இசை.
பி.சி.ஸ்ரீராம் அவர்களின் ஒளிப்பதிவு, ஒளி அமைப்புகளிலும், காட்சி கோனங்களிலும் கதையை விட்டு தனியே தெரியாமல் கதையோடு பயனித்தே தன் வித்தையை காண்பித்திருந்தார். ஒளிப்பதிவுக்காகவே கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். அழகான பெண் ஐம்புலன்களுக்கும் நிறைவை தறுவாள்(நன்றி:காமத்து பால்,திருவள்ளுவர்) என்பது போல திரைபடம் அமைந்திருந்தது. காதல்,மருத்துவம்,பாசம், அரசியல், பாலியல், வாழ்வியல் போன்றவை நுட்பமாகவும் மனதில் பதியும் படியும் சொல்ல பட்டிருந்தன.
பழம்பெரும் நடிகர் அமிதாப் அவர்கள் மேக்கப்பையும் மீரி(தசாவதாரத்தை போல இல்லாமல்) நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவர் மகன் அபிஷேக்கும் அவரது பணியை செவ்வனே செய்து இருந்தார். நேர்மையான அரசியல்வாதியாக இருக்க முற்சிப்பதில் உள்ள சோதனைகளும் நெருக்கடிகளையும் மிகவும் நன்றாக கையாண்டு உள்ளார்.
படத்தில் நடித்தவர்களில் எனக்கு மிகவும் பிடித்தது வித்யா பாலனின் நடிப்பு, உடலை காட்டி பிழைப்பு நடத்தும் நடிகைகள் மிகுந்த இந்த கால கட்டத்தில் முகத்திலும் உடல் மொழியிலும் நடிப்பை காண்பிக்கும் இப்படி ஒரு நடிகையா? அவர் தோன்றும் ஒவ்வொரு காட்ச்சியிலும் ஸ்கோர் செய்கிறார். காதல் ஆகட்டும், காமம் ஆகட்டும், சோகம் ஆகட்டும், மகனிடம் காட்டும் பாசமாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ஆஹா. ஆர்பாட்டம் இல்லாத மிக இயல்பான நடிப்பு, இவரை போன்ற நடிகைகளை திரை உலக படைப்பாளிகள் வீனடித்து விடக்கூடாது. இவரது நடிப்புக்காகவே இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.
இது போன்ற நல்ல தரமான படங்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் திரு பால்கி.
பா............... அப்பப்பா

Thursday, January 14, 2010

14-01-2010 சென்னை சங்கமம், பல்லாவரம் கண்டோன்மண்ட் பகுதியில்

சென்னை சங்கமம் என்னும் கலாச்சார திருவிழா கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் திருநாள் சமயத்தில் சென்னையில் தமிழ் மைய்யம் மற்றும் கவிதாயினி(?) கனிமொழி அவர்களின் முயற்ச்சியில் நடத்தப்பட்டுவருகிறது. இத்தனை ஆண்டுகளாக இந்த நிகழ்வை காண்பதற்கான முயற்ச்சியை நான் எடுத்ததில்லை. இந்த ஆண்டு நேற்றைய செய்தி தாள்களில் நிகழ்ச்சி நிரல்களை பார்த்துவிட்டு ஒரு பதிவு போட்டு இருந்தேன், சரி என்ன தான் நடக்கிறது சென்னை சங்கமத்தில், சென்று தான் பார்ப்போமே என்று நன்பர் கார்த்திக் மற்றும் தம்பி நந்துவுடன் சென்னை பல்லாவரம் கண்டோன்மண்ட் பகுதியில் நடக்கும் விழாவிற்க்கு செல்ல முடிவெடுத்து சென்றோம்.

சுமார் 5.30 மணிக்கு அங்கு சென்ற போது வில்லு பாட்டு கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தார்கள், கூட்டமும் அவ்வளவாக இல்லை.

ஒரு பக்கம் பொய் கால் கலைஞர் ஒருவர் நடை பழகி கொண்டிருந்தார்அதை நவ நாகரீக நங்கை ஒருவர் படம் பிடித்து கொண்டிருந்தார்.
இன்னொரு புறம் கலைஞர்கள் அவர்களின் கலை வகைகளை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர்


பல தரப்பட்ட மக்களும் சாதி மத பேதமின்றி வரத்தொடங்கி இருந்தார்கள்


வில்லு பாட்டு முடிந்தவுடன் தேவராட்டம் தொடங்கியது, ஆடிய கலைஞர்களும் இசைத்த கலைஞர்களும் தங்கள் திறமையை நண்கு வெளிக்காட்டினர்.முன்பு சொன்ன அந்த நவ நாகரீக நங்கையு்ம் எல்லா நிகழ்வுகளையும் தன் கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.

சூரியன் மெதுவாக மறைய தொடங்கியது கூட்டமும் மெதுவாக சேரத்தொடங்கியது.


தேவராட்டத்தை தொடர்ந்து கேரள பாரம்பரிய களரி(தமிழகத்தை தாயகமாக கொண்டதாம்)சண்டை, வல்லுநர்களாள் செய்து காண்பிக்கப்பட்டது. மிகவும் கவனத்துடன் செயல் பட வேண்டிய சண்டை இது, காண்போரை அதிசயத்தில் ஆழ்த்தியது.
அடுத்து ஆந்திரா பாரம்பரிய நடனங்கள் மற்றும் பாடல்கள் கொண்டு வந்தனர் ஆந்திர கலைஞர்கள். இவர்களின் கலை வெளிப்பாடே இன்றைய highlight எனலாம், அவ்வளவு அருமையாக அவர்களின் நடனமுன் பாடல்களும் இருந்தன.நேரம் ஆக ஆக கூட்டம் குவிய தொடங்கியது, நம் மக்கள் தொலைகாட்சி பெட்டியையும், திரைபடங்களையும் விட்டு விட்டு இது போன்ற நிகழ்சிகளுக்கு வந்தது மிகவும் வியப்பை தந்தது.
ஆந்திர கலைகளை தொடர்ந்து, தமிழகத்தின் தப்பாட்டமும் அதன் பிறகு “நக்கு முக்கா” புகழ் சின்ன பொன்னு அவர்களின் பாடல்களும் வந்தன. சின்ன பொன்னு அவர்கள் வரும் வரை இது ஒரு பாரம்பரிய கலை விழாவாகவே நடந்தது, அவர்களின் வருகைக்கு பின் கூட்டமும் அதிகமாகி விழாவும் தன் நிறம் மாற தொடங்கியது, ஒரு அம்மன் கோவில் கச்சேரி போல ஆகிவிட்டது, ரசிகர்களின் விசில் சப்தமும் ஆர்பாட்டமும், விழாவை காண வந்த சிலர் அவர்களின் குழந்தைகளை மேடையேற்றி ஆட செய்வதுமாக அந்த பாரம்பரிய கலை விழா சூழலே கெட்டு விட்டது. நானும் வெறுப்படந்து பாதியிலேயே கிளம்பி வந்து விட்டேன்.சென்னை போன்ற நகரங்களில் பிறந்து வளர்ந்த என்னை போன்றவர்களுக்கு இது போன்ற கிராமிய பாரம்பரிய கலை விழா ஒரு eye opener என்றே சொல்லலாம். இது போன்ற விழாக்கள் ஊக்குவிக்க பட வேண்டியவை. எல்லா தரப்பு மக்களையும் கவக்கூடியதாக இந்த விழா இருந்தது, ஆனால் பாரம்பரிய கலைகளுக்கு மட்டுமே ஆன விழாவா இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய ஒரு முக்கிய அம்சம் ஒலி அமைப்பு, பம்மல் பகுதியை சேர்ந்த ”கணேஷ் ஆடியோஸ்” மிகவும் அருமையான ஒலி அமைப்பு செய்திருந்தார்கள். மொத்தத்தில் சென்னை சங்கமம் வரவேற்க்க,ஆதரிக்க வேண்டிய ஒன்றே.

குறிப்பு:-அற்புதமான கேமரா கோனங்களில் நிகழ்ச்சிகளை பதிவு செய்து கொடுத்த தம்பி நந்து என்று அழைக்கப்படும் நவநீத கண்ணனுக்கு நன்றிகள்.

VIDEOS:

http://www.youtube.com/watch?v=YD44qEDFdz4

http://www.youtube.com/watch?v=YKsLMUhTKaY

http://www.youtube.com/watch?v=VxtjaGZ8nSY

http://www.youtube.com/watch?v=jVGPKaFo_BQ

http://www.youtube.com/watch?v=cRXp44z5C-Y

http://www.youtube.com/watch?v=tsW6RgxSx8k

http://www.youtube.com/watch?v=H8Pn_Klbw70

http://www.youtube.com/watch?v=NuLPSKUxMGA

http://www.youtube.com/watch?v=HCL2W2QWY10

http://www.youtube.com/watch?v=S4hji1UA7Dw

Wednesday, January 13, 2010

விழாக்களுக் கொண்டாட்டங்களும் இவர்களுக்கு உண்டா?

சமீபத்தில் செய்திதாளில் படித்த ஒரு செய்தி (http://www.hindu.com/2010/01/11/stories/2010011158230300.htm) மனதில் சில கேள்விகளை எழுப்பியது.

”பாடி கூலி” எனப்படும் மனிதர்கள், நம்மை போலவே எல்லா உணர்வுகளும் உள்ள மனிதர்கள், எப்படி உணர்வுகளை கட்டுபடுத்தி அல்லது உணர்வுகள் இல்லாமல் தொடர்வண்டியில் அடி பட்டு சிதைந்து உருக்குலைந்து போன மனிதர்களின் மிச்சங்களை(Final Destination series, சேவிங் ப்ரைவேட் ரையான் போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு மனித உடலின் மிச்சங்கள் எப்படி இருக்கும் என்பது தெரியும்) சேகரித்து அனுப்புகிறார்கள் என்று, இதற்கு அவர்களுக்கு கிடைக்கும் ஊதியமோ மிகவும் குறைவு(ரூ.50-150). மேற்சொன்ன செய்தியில் உள்ள வரிகள்”Vetri, along with six of his colleagues, has to clear close to 35 corpses a month and must carry it on their shoulders to the mortuary in the Government General Hospital. “On a number of occasions, we have to guard the corpse till police officials come for investigation. We also have to guard the remains from dogs near the tracks,” adds Arumugam (27), another body coolie in Egmore. யோசித்து பாருங்கள் நானோ நீங்களோ செய்ய துனிவோமா? இத்தனைக்கும் இவர்கள் தொடர்வண்டி துறையின் நிரந்தர ஊழியர்களோ அல்லது வேறு சலுகைகளோ இவர்களுக்கு கிடையாது. ஒரு வேளை உனவுக்காக அல்லது ஒரு நாள் பிழப்புக்காக இந்த வேலை. இவர்களும் உணர்வுகள் உள்ள மனிதர்கள் தான் என்பதர்க்கு சாட்சியாக என் அனுபவம் ஒன்று:-

சுமார் 5 -6 ஆண்டுகளுக்கு முன் சென்னை பெரம்பூர் தொடர்வண்டி நிலையத்தில் நன்பர் ஒருவருக்கா காத்திருந்த போது அழுக்கு லுங்கி,சட்டையுடன் சற்றே போதையில் ஒரு நபர் ரயில் படியில் Style ஆக தொற்றிகொண்டு ஏறிக்செல்லும் இளைஞர்களை பார்த்து திட்டிக் கொண்டிருந்தார்,அவ்வாரு செய்ய வேண்டாம் உங்கள் பெற்றோர் எப்படி எல்லம் உங்களை வளர்த்து ஆளாக்கி இருப்பார்கள் கீழே விழுந்து சாக போகிரீர்கள் என்று. சமூக ஆர்வலரான என் நன்பர் வந்ததும் அந்த நபரிடம் பேச்சு கொடுத்த போது தெரிந்தது அந்த நபர் இருப்பு பாதையில் அடிபட்டு மரணிப்பவர்களை சுமக்கும் ”பாடி கூலி” என்று, அவரது அனுபவங்களை விளக்கி சொல்லிக்கொண்டு இருந்தார், பொதுவாக அவர்கள் மது அருந்தி விட்டு தான் சவங்களை எடுக்க போவார்களாம். சிறிது நேரம் பேசிவிட்டு நன்பர் அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு நாங்கள் எங்கள் வேலையை பார்க்க போய்விட்டோம்.

அதன் பிறகு நீண்ட நாட்க்கள் கழித்து இந்த செய்தியை படிக்கும் போது இவர்களின் நினைவு வந்தது, எத்தனையோ நல்ல நிறுவனங்கள் நல்ல பல விஷயங்களை செய்ய்து வருகின்றன, இவர்களுக்கும் யாராவது உதவ முன் வருவார்களா? நம் போன்றோர் எத்தனையோ பொங்கல், தீபாவளி போன்ற விழாக்களும் கொண்டாட்டங்களும் செய்து வருகிறோம், ஆனால் இவர்களை போன்றவர்களுக்கு?

இந்த விஷயங்களை எழுதிக்கொண்டிருக்கும் போது தோன்றிய ஒன்று, இவர்களை பற்றி ஒரு அல்லது இவர்களின் வாழ்கையை பின்னனியாக வைத்து ஒரு சிறுகதை அல்லது ஒரு குறும்படம் தயாரிக்க முயற்ச்சி எடுத்தால் என்ன?

சென்னை சங்கமம் 2010

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை இந்த தலைமுறைக்கு நினைவூட்டும் முயற்ச்சியாக

துவங்க பட்டது தான் இந்த சென்னை சங்கமம்

(http://en.wikipedia.org/wiki/Chennai_Sangamam) என்று நினைவு.ஆனால் இந்த ஆண்டு

நடத்தப்படும் சங்கமத்தின் நிகழ்ச்சி நிரலை பார்த்தால் கர்நாடக சங்கீதம்(தமிழ் இசையில்

இருந்து Adapt செய்யப்பட்டது),Western Classical,Keyboard(மேற்க்கதியா இசை),

திரையிசை மெட்டுக்கள்,கதக் நடனம்(வட மாநிலம்), அபஸ்வரம் ராம்ஜியின் மெல்லிசை

போன்றவை எல்லாம் இன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ளன. இத்தனை ஆண்டுகளாக

இவையெல்லம் நடத்தப்பட்டதா என தெரிய வில்லை, இவையெல்லாம் தான் தமிழ்

பாரம்பரிய கலைகளா? சென்னை சங்கமம் தடம் மாறிவிட்டதா? அல்லது வேறு அரசியல்

காரணங்களுக்காக இப்படி செய்யப்படுகிறதா? தமிழ் இன தலைவர் என பரப்புரைத்து

கொள்பருக்குத்தான் வெளிச்சம்.

Monday, January 11, 2010

முதல் பதிவு

நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இது நாள் வரை உலக வலையில் விஷயங்கள் பிடித்துக்கொண்டிருந்த நான், என் கருத்துக்களையும் பதிவு செய்து வைக்க என்னி தொடங்கி இருப்பது இந்த இலக்கிலாத பயனம். தொடங்கிய எந்த பயணத்திற்க்கும் முடிவு என்பது உன்டு, அது இலக்கிலாத பயணமே ஆனாலும். இந்த பயணம் பயணுள்ளதாக அமைய வேண்டும், மீண்டும் பதியும் வரை பயனத்தின் தொடக்கத்திலேயே சிறு ஓய்வு.


K.