Wednesday, September 1, 2010

வள்ளுவர் கோட்டம்: சென்னை

1976ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் குப்பை மேடாக இருந்த ஏரியின் நடுப்பகுதியில், திருவள்ளுவர் மேல் கொண்ட மாறாத பற்றினால் அன்றைய முதல்வர், கலைஞர் கருணாநிதியால், சிற்ப கலைஞர் கணபதி ஸ்தபதியை கொண்டு வடிவமைக்க பட்டு East Coast Constructions and Industries ஆல் உருவக்க பட்ட நினைவகம் வள்ளுவர் கோட்டம். ”குப்பையும் கோபுரமாகும் கோபுரமும் குப்பை ஆகும்” என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணமக இன்று விளங்குகிறது.

நுழைவாயிலில் இருந்து அரங்கமும், தேரின் மேல் பகுதியும்.




இந்தியன் வங்கி பராமரிப்பில் புல்வெளி


திருவாரூர் தேர்வடிவில்

திருவாரூர் தேரின்(திரு.கருணாநிதி பிறந்தது திருவாரூர் அருகில் தான்) மாதிரியில் அமைக்க பட்டுள்ள சிற்பத்தேர் அனைவரையும் மிகவும் கவரும். ஆசை ஆசையாக இந்த நினைவகத்தை வடிவமைத்து கட்டிய திரு. கருணாநிதி அவர்களுக்கு அதை திறந்து வைக்கும் வாய்ப்பு இல்லாமல் அவரது ஆட்சி கலைக்கபட்டு விட்டது, அவசர நிலை அறிவிக்க பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறை படுத்தபட்டது. . ஜனாதிபதி ஆட்சி செய்த காலத்தில் அன்றைய ஜனாதிபதி திரு. ஃபக்ருதீன் அலி அஹமத் அவர்களால் திறக்க பட்டது. பின்பு 13 ஆண்டுகள் கழித்து 1989ல் மீண்டும் முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட திரு.கருணாநிதி இதே வள்ளுவர் கோட்டத்தில் தான் பதவி ஏற்றுக்கொண்டார்





இந்த நினைவகத்தின் மற்றோர் சிறப்பு இங்குள்ள அரங்கம். தூன்களே இல்லாத இந்த அரங்கம் ஆசியாவின் மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றாகும். ஏறக்குறைய 4000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு களிக்க கூடிய வகையில் அமைந்த அரங்கமகும் இது. நான் சென்று பார்த போது இந்த அரங்கத்தில் வட கிழக்கு மாநிலங்களில் வடிவமைக்க பட்ட கலை பொருட்கள் காட்சி படுத்த பட்டிருந்தன. அழகான புல் வெளியும் மலை செடிகளும் இந்தியன் வங்கியால் உருவக்க பட்டு நன்கு பரமரிக்க படுகிறது.




தேரை சுற்றி அமைக்க பட்டுள்ள வேலியின் உறுதியை சோதிக்கும் சமூக ஆர்வலர்கள்





அரசியல் மறுதல்களால் பல்வேறு காலங்களில் பல்வேறு இன்னல்களையும், பராமரிப்புகளையும் சந்தித்த இந்த வள்ளுவர் கோட்டத்தின் இன்றைய நிலையும் அப்படி ஒன்றும் மெச்சும்படி இல்லை, இப்போது நடப்பது திரு,கருனாநிதியின் ஆட்சியாகவே இருந்தாலும். இன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய ”மண்ணார் & கம்பெனி” போல சில இடங்களிலும், காதல் விளையாட்டுக்கள் அரங்கேரும் இடமாகவும், குப்பை கூளம் சில இடங்களிலும், காண சகிக்க முடியாமல் உள்ளது. ஒரு அழகிய குளம் பராமரிப்பின்றி அழுக்கு குட்டையாக காட்சியளிக்கிறது. இதையெல்லம் மீறி ஒரு சில சுற்றுலா பயனிகளும் வரத்தான் செய்கிறார்கள். முதல்வர் அவர்கள் தன் பல்வேறு பனிகளுக்கிடயே தான் உருவாக்கிய இந்த நினைவகத்தையும் கவனித்து பராமரிக்க செய்தால் நன்றாக இருக்கும். எல்ல வித காட்சிகளையும் படம் பிடித்தாலும் நல்ல விஷங்களையே உங்கள் காட்சிக்கு வைத்திருக்கிறேன்

எது எப்படியோ சென்னை மாநகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கடந்த 35ஆண்டுகளாக விளங்குகிறது இந்த வள்ளுவர் கோட்டம்.
நன்றி:விக்கீபீடியா

4 comments:

Post a Comment