இன்று நன்பர்களுடன் 16ம் ஆண்டாக(1995 முதல்) தொடர்ந்து சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். அங்கு நடந்த கவியரங்கம் நிகழ்சியில் கவி மார்கண்டேயர் வாலி அவர்களின் அசத்தலான பேச்சின் ஒரு பகுதி இங்கே.Saturday, January 8, 2011
Exclusive:கவிஞர் வாலி @ சென்னை புத்தக கண்காட்சி 2011
இன்று நன்பர்களுடன் 16ம் ஆண்டாக(1995 முதல்) தொடர்ந்து சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். அங்கு நடந்த கவியரங்கம் நிகழ்சியில் கவி மார்கண்டேயர் வாலி அவர்களின் அசத்தலான பேச்சின் ஒரு பகுதி இங்கே.Friday, December 31, 2010
தமிழ் செம்மொழி பூங்கா- சென்னை
நுழைவு சீட்டு வாங்கும் இடம்
மிகவும் மக்கள் நெருக்கடியும் வாகன போக்குவரத்தும் உள்ள சென்னை நகரின் இதயப்பகுதி போன்ற அண்ணா மேம்பால பகுதியில் இது போல இயற்கை சூழலுடன் கூடிய மூலிகை தோட்டம் இருப்பது மிகவும் மகிழ்சியான விஷயம்.
செம்மொழி பூங்கா அலுவலகம்
பொறுத்தப்பட்டுள்ளன, வந்திருந்த குழந்தைகள் அனைவரும் மிகவும் மகிழ்சியோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.
செடிகள் காய்ந்து விடாமல் இருக்க குறிப்பிட்ட கால இடைவேளைகளில்
தண்ணீர் Sprinkle செய்யபடுகிறது, இதனால் செடிகள் பசுமையாகவே பரமரிக்க படுகின்றன தூசும் மாசும் படியாமல். பூங்காவின் நடுப்பகுதியில்ஒரு நறுமனத் தோட்டம் அமைக்க பட்டு நறுமணம் வீசும் மலர்செடிகளும் மூலிகை செடிகளும் உள்ளன.
தண்ணீர் Sprinkle செய்யபடுகிறது, இதனால் செடிகள் பசுமையாகவே பரமரிக்க படுகின்றன தூசும் மாசும் படியாமல். பூங்காவின் நடுப்பகுதியில்ஒரு நறுமனத் தோட்டம் அமைக்க பட்டு நறுமணம் வீசும் மலர்செடிகளும் மூலிகை செடிகளும் உள்ளன.
ஒரு சில நமக்கு அறிமுகமான செடிகளும் உள்ளன. ஆங்காங்கே நீர் நிலைகள் அமைக்கப்பட்டு அவற்றில் வாத்து கூட்டங்களை நீந்த விட்டு இருப்பது அழகு.
பூங்காவில் நான்
சென்னை வாழ் மக்களும் சென்னைக்கு வருபவர்களும் கண்டிப்பாக வந்து
மகிழ வேண்டிய இடம் இந்த செம்மொழி பூங்கா.
wikipedia link தமிழில்.
படங்கள் நன்றி: திரு நவநீத கண்ணன்.
Tuesday, November 2, 2010
தீபாவளியும் மாசு கட்டுப்பாடும்
கீழே உள்ள விஷயங்களை துண்டு பிரசுரமாக நான் வசிக்கும் பகுதியில் வினியோகிக்க முயல்கிறேன். மக்கள் ஒத்துழைப்பார்களாக.
ஒலியினை குறைப்போம் செவியினை காப்போம்.
அன்பான வேண்டுகோள்
தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டு தன்மையையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிக ஓசையுடன் வெடிக்க கூடிய வெடிகளான நைட்ரஜன் வெடிகள், புல்லட் வெடிகள், எலக்ட்ரிக் வெடிகள் மற்றும் தொடர் சர வெடிகளை(1000,5000,10000 வாலாக்கள்) தவிர்த்து ஒளி அதிகம் தரக்கூடிய மத்தாப்பு வகைகளை பயன்படுத்தி கொண்டாடு வோம்.தீபாவளி பண்டிகையை கொண்டாடும் போது ”தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்” பொது மக்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பின் வரும் ஆலோசனைகளை வழங்குகிறது.
- இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
- குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம்.
- பட்டசு வெடிக்கும் போது அருகிலேயே ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்தல் நலம்(எதிர்பாராமல் ஏற்படும் தீயினை அனைக்க).
- பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை மாசினால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள். ஆஸ்துமா, ஒவ்வாமை(அலர்ஜி) போன்றவைகள் ஏற்படும் வாய்புகள் உள்ளன.
- 120 டெசிபல் ஒலி அளவுக்கு கீழ் உள்ள பட்டசுகளை மட்டுமே பயன்படுத்துதல் நல்லது.
- மருத்துவமனைகள், பள்ளிகள், நீதி மன்றங்கள் ஆகிய இடங்களில் வெடிகள் வெடிக்க கூடாது.
முடிந்த வரை குறைவான பட்டசுகளையே உபயோகிப்போம்.
இயன்ற வரை பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்போம், துனி பைகளை உபயோகிப்போம். மழை நீரை சேகரிப்போம். மரங்கள் நட்டு வளர்த்து மண் வளம் காப்போம்.
தீபாவளி பண்டிகயின் போது நமது கவணக்குறைவினாலும் அலட்சியத் தினாலும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட்டசுகளை தவிர்த்து மாசற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்.ஒலி மாசு ஓர் உயிர் கொல்லி புகை நமக்கு பகை.
குறிப்பு:-பொது நலம் கருதி தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் வினியோகித்த பிரசுரத்தை தழுவியது.
மக்களால் மக்களுக்காக
Subscribe to:
Comments
(Atom)
