Monday, January 17, 2011

சமத்துவ பொங்கல் 2011

நான் வசிக்கும் பகுதியான மண்ணிவாக்கத்தின் சொர்க்கபுரியாம் சண்முகாநகரிலே 16-01-2011 அன்று சமத்துவ பொங்கல் இதுவரை இல்லாத சீரோடும் சிறப்போடும் மிக பிரம்மாண்ட முறையிலே நகர் மக்கள் அனைவராலும் சிறுவர் பூங்காவில் கொண்டாடப்பட்டது. நகர் மகளிர் அனைவரும் இரவு பகலாக உழைத்து அழகான கோலங்கள் இட்டு விழா திடலை அலங்கரித்தனர்.

ஆடவர்கள் அனைவரும் பொதுநல சங்கத்தினருடன் சேர்ந்து சுமார் ஒரு வார காலம் தங்கள் பங்களிபினை வழங்கி இந்த விழா மிகுந்த சிறப்பாக நடை பெற உழைத்தனர். திண்டுக்கல் இளைய நிலா தப்பாட்ட கலை குழுவினர் தங்கள் ஆட்டம் பாட்டங்களோடு இந்த பொங்கல் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.D.லோகநாதன் அவர்கள், துனைத்தலைவர் திரு.M.M. கிருஷ்ணன், திரு. பொண்ணுசாமி மற்றும் ஊராட்சிமன்ற உருப்பினர்கள், மற்றும் பிரபலமான அரசியல் தலைவர்கள் திரு. புருஷோத்தமன், திரு செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நகரின் மகளிர் சுயஉதவி குழிவினர் ஒவ்வோர் குழுவினரும் ஒவ்வோர் பொங்கல் பானை வைத்து இயற்கைக்கு நன்று செலுத்தினர். தப்பாட்ட குழுவின் நடனம், மாட்டு வண்டி சவாரி, நகர் வாழ் குழந்தைகளின் கிராமிய நடனம் ஆகியவற்றை தொடர்ந்து சம பந்தி போஜனம் நடைபெற்றது.

முடிச்சூர் ”ஆதீஸ்வரர் ஆதரவற்றோர் இல்ல” குழந்தைகள் இந்த சம பந்தி போஜனத்தில் இரண்டாம் ஆண்டாக வந்து பங்கேற்றனர்.இந்த நிகழ்சிகளை எல்லம் ”கேப்டன் டிவி” குழிவினர் வந்து படம் பிடித்துக்கொண்டு சென்று தங்கள் கேப்டன் செய்திகளில் ஒளிபரப்பினர்.


மேலும் தகவல்கள் மற்றும் படங்கள்
@
http://shanmuganagar.blogspot.com/2011/01/2011.html

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Krubhakaran said...

கருத்தளித்தமைக்கு நன்றி திரு.ராம்ஜி

Post a Comment