Saturday, March 6, 2010
இயற்கையின் இசையில் இறை
அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்!
அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்!
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்!
பொருட்சாறு மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்!
போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்!
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்!
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்!
என்னிய நான் என்னியவார் எனக்கருளும் தெய்வம்.
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்!
சித்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்!
சில காலம் முன்பு ஒரு நன்பருக்காக உலக வலையில் இருந்து அருட்பிரகாச வள்ளலார் பாடல்கள் தேட நேர்ந்தது, மேற்கண்ட பாடல் நன்பரது விருப்ப பாடல், அந்த பாடலின் MP3 தேடி அவருக்கு தந்தேன், அந்த பாடல் ஆனந்தமாக ஆடி பாடுவது போல மெட்டமைத்து இசைக்க பட்டிருந்தது. இந்த பாடலை மேற்கேட்ட மெட்டில் சிறு வயதில் கேட்ட ஞாபகம் இருந்தது, அதை இயற்க்கை ஒலிகளோடு வீட்டிலேயே(மென் பொருட்க்கள் உதவியுடன்) ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தேன், நேற்று என் நன்பர் ராமேஸ்வரம் நோக்கி செல்வதாகவும் இந்த பாடலை கேட்டுக்கொண்டு செல்வதாகவும் சொன்னபோது மீண்டும் இதன் நினைவு வந்தது.
சரி இதை வலையேற்றி ஒரு பதிவிடலாம் என ஒரு என்னம். இந்த பாடலை
http://www.4shared.com/file/235283863/88e94272/ArutJothi_Deivam_with_Effects1.html
டவுண்லோட் செய்தும் கேட்க்கலாம், நல்ல ஒலித்தரம் உள்ள speaker அல்லது headphone(BASS நன்றாக இருப்பது) கொண்டு கேட்டால் சில விஷயங்களை உணர முடியும். முயற்சித்துவிட்டு பின்னூட்டம் இடவும்.
Subscribe to:
Post Comments
(Atom)
4 comments:
நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
one more information. Vadalur ArutJothi kovil jothi will be open to public only on pongal and vallalar birthday.
Nice post, I too enjoyed this song.
உங்கள் இதமான குரலில் நல்லா தாலாட்டு பாட்டு போல கேட்க சுகம்மா இருக்கு அண்ணா. அமைதியா பாட்டில் மூழ்கினா நிச்சயம் ஜோதியின் அருள் கிடைக்கும்.
It is good!
Post a Comment