Tuesday, February 23, 2010

மனம் போன போக்கில்-23-02-2010

கடவுள்

இன்று ”பகுத்தறிவு கமலின் படங்களில் இழையோடும் உள்ளார்ந்த ஆன்மிகம்”(http://www.virutcham.com/2010/02/பகுத்தறிவு-கமலின்-படங்கள/) என்ற பக்கத்தை பார்து படிக்க நேர்ந்தது, கடவுள் சம்பந்தமாக என் கருத்துக்களை பின்னூட்டம் இட்டேன் அது

””நாலு பக்கம் கஷ்டம் வந்தால் நாத்திகர்கும் கடவுள் உண்டாம்” என கண்ணதாசன் அவர்கள் சொன்னதாக கேள்வி பட்டிருக்கிறேன். தன்னம்பிக்கை குறையும் போது கடவுள் நம்பிக்கை வரும் என்பது என் கருத்து. கடவுள் நம்பிக்கையும் ”எஸ்கேபிசம்” தான். நம்மால் சில விஷயங்கள் முடியாத போது எல்லம் கடவுள் செயல், மேல இருக்குரவன் பாத்துப்பான் என செல்லி மன ஆறுதல் பட்டுக்கொள்ளலாம் அல்லவா? ”

=====================================================
பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா

நடிகர் அஜித்குமார் அவர்களை அல்லல் படுத்திக்கொண்டிருக்கும் மனித பதர்களை என்ன சொல்வது, இது கருத்து சுதந்திரம் இல்லாத நாட, நடப்பது என்ன சர்வாதிகார ஆட்சியா? தமிழக தலைமையின் பெண் ”துனையின்” தூண்டுதலால் இந்த விஷயம் நடப்பது போல தெரிகிறது, ”ஜக்குவார் தகரம்” அந்த அம்மையாரின் சாதி என கேள்வி. சமீபத்தில் தான் தமிழக தலைமை சாதிகள் அற்ற சமுதாயம் வேண்டும், எல்லோரும் சரி சமம் என்று சொன்னதாக ஞாபகம். இது போன்ற நபர்கள் அவர்களாகவே தங்கள் உன்மை நிலையை அவ்வப்போது நமக்கு காண்பித்தாலும் நாம் திருந்த போவது இல்லை. வரவிருக்கும் தேர்தலில் ஆவது அதிக "49 O"க்கள் வரட்டும்.

======================================
சமீபத்திய தமிழ் சினிமாக்கள்

சமீபத்தில் வெளியான கோவா,தமிழ்படம்,அசல், குட்டி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் பார்த்தேன், கோவாவும் தமிழ்படமும் நல்ல பொழுதுபோக்கு படங்கள், தமிழ்படத்தில் பாரபட்டசம் பார்க்கமல் இது வரை வந்த(80துகளில் இருந்து) தமிழ் படங்களை நக்கலடித்து இருந்தார்கள். மிக சிறந்த முயற்சி. ”பச்ச மஞ்ச சிகப்பு தமிழன் நான்” பாடல் எல்லா சினிமா நாயகர்களுக்கும் சவுக்கடி, ”ஓ மகசீயா” பாடல் என் மிக விருப்ப பாடல் பட்டியலில் சேர்ந்துள்ளது.

கோவா,
வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய படங்களில் சிறந்த படம், இயக்குனராக வெங்கட் பிரபு மேம்பட்டு இருக்கிறார், பலர் இந்த படத்தை குறை சொல்லி இருந்தாலும் அந்த படத்தின் theme என்று பார்த்தால் அவர் ஒரு பால் உறவை பற்றி சொல்லி இருப்பதும் சரியே. என் பார்வையில் அந்த படத்தில் உள்ள குறை சினேகா-வைபவ் சம்மந்தப்பட்ட காட்சிகள் மற்றும் கதை தான். பியா காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் நன்றாக நடித்து இருந்தார். ”இது வரை இல்லாத உணர்விது” பாடல் Excellent.

அசல்,
ஜேம்ஸ்பாண்ட் படம் போலா எடுக்க நினைத்து அதில் ஓரளவுக்கு வெற்றி பெற்று இருக்கும் படம். பில்லா போல Stlyish ஆக இருந்தாலும் ஏதோ குறை, அஜித் வித்தியாசமான மீசை இல்லாமலேயே நடித்திருந்து இருக்கலாம். அசல் தீம் பாடல் ஜேம்ஸ்பாண்ட் பட பானியிலேயே இருக்கிறது. அசல் பல விஷயங்கள் நகல்(ஓரளவுக்கு).

குட்டி-
வெட்டி, பள்ளி, கல்லூரி இளைஞர்களுக்கு மட்டும்.

1000தில் 1வன்,
செல்வராகவனின் பெரும் பிழை. இது பற்றி சாரு நிவேதிதா மிக அருமையாக விமர்சித்து இருப்பார், அவரது பக்கம்(charuonline.com)தற்காலிகமாக down ஆகி உள்ளது, அங்கே சென்று படித்த்து கொள்ளவும். அவருடைய பல கருத்துகள் எனக்கு உடன் பாடு இல்லாவிடினும், 1000தில் 1வன் விஷயத்தில் அவருடன் நான் உடன் படுகிறேன்.

1000தில் 1 வன் Wasted Effort.




என் பார்வையில்- எழு ஞாயிறு, மண்ணிவாக்கம்.





5 comments:

Gayathri said...

It is quite intresting.

sathish said...

good and nice sir

K said...

thanks Gai and Sathish

s k naicker said...

good, bold initiative.

அம்பர் முருகன் said...

என் இனிய நண்பரே,
உங்கள் வலைப் பக்கத்தை பார்த்தேன். நன்றாக எழுதி உள்ளீர்கள். நிறைய எழுத்து பிழைகள் உள்ளன. அதில் கவனம் கொள்ளவும்.

படம் "ப்பா" விமர்சனம் ரொம்ப நன்றாக ஆய்வுக்கு உட்படுத்தி எழுதி இருந்தீர்கள். அதே போன்றே தொடர்ந்து எழுதவும்.

சிநேகமாய்

முருகன் சுப்பராயன்

மும்பை

Post a Comment