Thursday, March 25, 2010

இசை: ரெட்டைச்சுழி-கார்திக்ராஜா

இசை, இதற்கு இசையாத மனிதர்கள் வெகு சிலரே, முகலாய மன்னன் ஒளரங்கசிப்புக்கு இசை பிடிக்காத விஷயம் என கேள்விபட்டிருக்கிறேன், இது போல வெகு சிலர் இன்றும் இருக்கக்கூடும். ஆனால் இசைக்கு வசமாகாத உயிர்களே கிடையாது என சொல்லக்ககூடிய அளவுக்கு எல்லோருக்கும் இசை பிடிக்கும். நாம் இன்றையகாலகட்டத்தில் இசை என பெரும்பாலும் கேட்பது சினிமா பாடல்களையே.

அந்த சினிமா பாடல்களையும் பல்வேறு செவ்வியல் இசை வடிவங்களை சினிமா பாடல்களில் கலந்து நமக்கு சுவைபட பரிமாரிய பல்வேறு இசை வித்தகர்களை எனக்கு மிகவும் பிடித்தவர் ”இசைஞானி ” என்ற பட்டத்துடன்(உன்மையான தகுதியுடன்) போற்றப்படும் இளையராஜா அவர்கள். இவரை பற்றி எழுதவேண்டும் என்றால் 2000-3000 பக்கங்கள் எழுதலாம், அவ்வளவு அருமையான இசை படைப்புகள் நமக்கு அளித்துள்ளார்.

இவரது புதல்வர் கார்திக்ராஜா அவர்கள், தன்னை தன் தந்தை இளையராஜா என்னும் ஆலமரத்தின் நிழலில் இருத்திக்கொண்டிருப்பதால், அவரது முழுத்திறமையை வெளி உலகம் அறியாமல் இருக்கிறது. அவ்வப்போது இவரது இசையில் வெளிவரும் சினிமாக்களும் பெரும் வியாபார வெற்றி பெறாமல் போனதால், நிறைய பட வாய்புகளும் அவருக்கு இல்லாமல் போனது. ஏறக்குறைய 14 ஆண்டுகளாக இசை அமைத்து கொண்டிருந்தாலும் அவருக்கு கிடைத்த வாய்புகளும் புகழும் குறைவே.

அவர் தனி இசையமைப்பாளராக இசையமைக்க ஆரம்பித்த காலத்தில் வந்த படங்களின் பாடல்களில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கும் ரெட்டைச்சுழி படப்பாடல்கள் வரை அவரது இசையில் ஒரு தனி முத்திரை இருக்கும். அலெக்சாண்டர் படத்தில் “நதியோரம் வீசும் தென்றல்”, மாணிக்கம் படத்தில் ”தூது செல்லு இளம்” ,”உனக்கென ராசா” எனக்கொரு மகன் பிறப்பான் படத்தில் “சம் சம் சம் பூ மஞ்சம்”(இதே பாடல் பின்னாளில் ஹிந்தியிலும் GRAHAN படத்தில் புது வடிவம் பெற்றது).

உல்லாசம் பட பாடல்கள் அனைவரும் அறிந்ததே, குறிப்பாக படத்தில் வரும் ஒரு குறும் பாடல் ”இளவேனில் தாலாட்டும்” மிகவும் அருமையான பாடல், கர்நாடக இசை சாயலும், மேற்கத்திய இசையும் கலந்து தன்னுடைய முத்திரையாய் ஒரு சில ஜாலங்கள் செய்து, ஒரு அற்புதத்தை படைத்திருப்பார், குறிப்பாக ஒரு புல்லாங்க்குழல் இசை பாடல் முழுதும் பயணிக்கும். Heavenly bit.

அவரது பல்வேறு நல்ல பாடல்களை பற்றி பிறகு ஒரு பதிவு போடுகிறேன், இப்பொழுது அவரது சமீபத்திய படப்பான ரெட்டைச்சுழி பட பாடல்களை பற்றி:-

இயக்குனர் சங்கர் தயாரிப்பில், தாமிரா இயக்கத்தில், பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகிய ஜாம்பவான்கள் நடிப்பில் உருவாகிவரும் படம், எனவே இசை குறித்த பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது, அதை நிறைவாகவே செய்திருக்கிறார் கார்த்திக்ராஜா.

1) பம் பம் பம்பர காத்து:- பழனிபாரதி எழுதி, வயலின் பத்மா,ரீட்டா,குழுவினர் பாடிய பாடல். பாடலின் ஆரம்பமே கார்திக்ராஜாவின் trademark தாளத்துடன் தெடங்கி மெது மெதுவெ நம்மை மயக்குகிறது. தனது சேர்ந்திசை(chorus) ஜாலத்தையும் நடு நடுவே தூவி தாலாட்டுகிறார்.

2)பட்டளம் பாருடா:- வே.ராமசாமி எழுதி, அர்மான்மாலிக், சர்வான்,V.S.K.பவுசியா மற்றும் பத்மாசேஷாத்ரி பள்ளி குழந்தைகள் பாடியது. குழந்தைகள் சேர்ந்திசையில் ஆரம்பிக்கிறது. அடித்து ஆடியிருக்கிரார் கார்த்திக் இந்த பாடலில். பல்வேறு வகையான தாளங்களில் அடி பின்னி எடுத்திருக்கிறார். நடு நடுவே trumpet வேறு புகுந்து விளையாடுகிறது.

3) நான் என்று சொல்:- சந்திரா எழுத்தில், ஹரிஹரன்,ஹரிசரன், ஸ்ரீராம் பார்த்தசாரதி மூவரும் ஜீவனூட்டியுள்ள பாடல், இதே பாடல் ஹரிஹரன் குரல் மட்டும் கொண்டு இன்னொரு முறையும் வருகிறது. சற்றே தன் தந்தையின் சாயலில் மெட்டமைத்துள்ளார் கார்த்திக், இசையமைப்பில் தன் தனி முத்திரையையும் பதித்து இருக்கிறார். சோக பாடலாக இருப்பதால் மக்களை கவரும் வாய்புகள் குறைவே.

4) பூச்சாண்டி கண்ணழகி:- அண்ணாமலை எழுதி, பெல்லி ராஜ், ரீட்டா குரல்களில், இந்த பாடல் கார்த்திராஜ Special என்றே சொல்லலாம், சராசரி குத்து பாடலாக இல்லாமல் இசையமைப்பில் பல்வேறு வேறுபாடுகள் காட்டி, தாளம் போட்டு ரசிக்க வைக்கிறார், வித்தியாசமான சத்தங்களில் இசை அடித்து விளையாடுகிறது. இதே பாடல் ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல் குரல்களிலும் வருகிரது, இவர்களின் குரலில் இந்த பாடல் சற்றே தூக்கலான உற்சாகத்தில் உள்ளது. ஹரியும் ஷ்ரேயாவும் கலக்கி இருக்கிறார்கள்.

5) பற பற கிளி:- பழனி பாரதி எழுதி, ராகுல் நம்பியார், தீப மரியம் பாடியது. அனேகமாக கேட்க்கும் எல்லோரும் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக ஹம் செய்யக்கூடிய பாடல். பாடலின் இடை இசையில் கார்திக்கின் மாயாஜாலம், Strings, rhythms, bells என கலக்கிவிட்டார், மனதை வருடி தாலாட்டும் excellent மெலடி. இந்த பாடல் instrumental version இருந்தால் அது ஒரு musical ecstasy யாக இருக்கும்.


Well done Karthik. Great job after a quite long time. சமீபத்தில் ஒரே படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக உங்களுக்கு அமைந்து வெகுநாட்கள் ஆனது, அதை நிறைவு செய்யும் வகையில் ரெட்டைச்சுழி அமைந்துள்ளது.
வாழ்துகள்.

3 comments:

janibh said...

you are true.
The varius music styles..transform us in to other world of our own.I recall your own" Arutperunjothi" you gifted for me..
your blog portraits many horizens..
Thank you.
( You can give some links to the world music too)

Krubhakaran said...

thanks for the comments sir

Karthik said...

Ullasam, Doom Doom Doom & Ullam kollai pogudae nnu avar padam paatunga enakku romba pidikkum.

Avarum Cine field la click aana nammaku innum variety kidaikum.

Pona vaaram Dinamani la, thanudaya Somberi thaanam thaan Chance illadaduku kaaranamnu solli irukkar, adhay thiruthika poradagavum sollirukkar. Apdi avar panna nanamakku variety kidaikum.

Yuvan epdi Aamir, Simbu venkat prabu nu sila nalla directors ku thodarndu panrarao, adhe madhiri, karthik um sila nalla directors ku thodarndu music paana, field la oru pidippu kidaikkum. Appuram Sky thaan limit.

Post a Comment