Monday, March 8, 2010

யார் சந்நியாசி - கமல்,இளையராஜா விளக்கம்

சமீபமாக பரபரப்பாக பேசப்படும் போலிச்சாமியார் விவகாரம் எல்லோரும் அறிந்ததே. இதே போல பல போலிச்சாமியார்கள் முன்பும் இருந்ததுன்டு, 90களில் பிரபலமான ப்ரேமானந்தன், சில வருடங்கள் முன் வெங்கடேச சதிர்வேதி, ஜெயேந்திரன்,விஜயேந்திரன், இப்போது நித்யானந்தன். பலரால் கடவுளாகவே வணங்கப்படும் புட்டபர்த்தி சாமியார் பற்றி கூட பாலியல் குற்றச்சாட்டு உன்டு.

தற்போது பிரபலமாக இருக்கும் ஜக்கி வாசுதேவை பற்றி கூட சுமார் 10-12 வருடங்களுக்கு முன் “கர்நாடகத்தை சேர்ந்த பிரபல சாமியார் மனைவியின் கொலை வழக்கில் விசாரனை” என சன் செய்திகளில் கேட்டதாக நினைவு. தன் மனைவியையே கொன்று விட்டதாக வழக்கு, ஆனால் அவர் தன் மனைவிக்கு மோட்ட்சம் அளித்ததாக வழக்கு முடிக்க பட்டதாக நினைவு, ஆனால் நம் மக்கள் எல்லவற்றையும் மறந்து ஆடு மாடு மந்தைகள் போல இவர்கள் பின்னால் தான் போகிறார்கள்.

வெங்கடேச சதுர்வேதியை பற்றி பத்திரிக்கைகளில் வராத செய்தியே இல்லை, அன்றைய முதல்வர் ஜெயலலிதா இவன் செய்த அட்டூழியங்களை கேட்டு உடணடியாக கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்டதால படித்த ஞாபகம். பெண்களுக்கு அவ்வளவு கொடுமைகள் செய்துள்ளான். ஆனால் அதே சதுர்வேதி சமிபத்தில் ஒருசொற்பொழிவு ஆற்றி இருக்கிறார் அந்தவிழாவில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் கலந்து கொண்டிருக்கிறார், இதோ அதற்கான வீடியோ சுட்டி:- http://www.chennaionline.com/video/index.aspx?vid=1866&Title=Chaturvedi%20Swamigal%20at%20Potramarai%20-%20Part%20I&Page=0 இந்த கொடுமையை என்ன சொல்வது?

ஜெயேந்திரன், விஜயேந்திரன் விவகாரம் ஊர்றறிந்தது, நக்கீரன் பத்திரிக்கை “சுகண்யா நேக்கு, சொர்ணமால்யா நோக்கு” என ஜெயேந்திரன் சொன்னதாக வெளியிட்ட ஞாபகம், ரவி சுப்பிரமணியம் என்பவன் சங்கர மடடத்தின் சகலத்தையும் ”பிட்டு பிட்டு” நக்கீரனில் எழுதி இருவரும் காசு பார்த்தனர். இது போல எல்லா மதங்களிலும் எல்ல தகிடு தத்தமும் நடந்து கொண்டுதான் உள்ளது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். எவன் ஒருவன் தன்னை முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்து கடவுள் வியாபாரம் செய்கிறானோ அவனிடம் அனைவரும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே BROKER எதற்கு?

திரு. கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜ MBBS படத்தில் ஒரு வசனம் : “கடவுள் இல்லனு சொல்றான் பார் அவன நம்பலாம், கடவுள் இருக்கார்னு சொல்றான் பார், அவன கூட நம்பிட்லாம், ஆனா, நான் தான் கடவுள்னு சொல்றாம் பார் அவன மட்டும் நம்பவே கூடாது, பூட்டகேசாயிடுவ” .

இனி இளையராஜா சொல்வதை கேளுங்கள்

http://www.4shared.com/file/236823455/997e6cba/Who_is_Saamiyaar.html
உங்கள் கருத்துகள் வரவேற்க படுகின்றன.

7 comments:

சங்கரராம் said...

nall padhivu

Karthik said...

Podhuvavae naatula pala thurainga Seerazhinjhu varudu. Arasiyalvadhinga, Vakkil, Police, Doctor, Govt. Servants nnu edhu eduthikittalum nelame romba mosama thaan irukku ! Ippo innum mosama poi Court, Judge, Saamiyaarungura alavukku poyachu !

Janagale Kaasu vaangittu "vote" podara kaalam kooda vandachu ! Adhavadhu janagala OOZHAL panna aarambichitaanga !

Ellorum Panam Panam nu oda aarambichitaanga ! Panam endha vazhila yavadhu vandha podhum nu ninaikiraanga ! Adhanala Life Style e romba nerukadiya poiduchu ! Prachanninga pidungi thinnudhu ! Adhuku edhavdu vazhi irukaanu paathu, poi Saamiyarunga kitta maatikitaaranga !

Konja naala therinju ellarum muzhichukuvaanga ! Appo ada Thi. Ka kaaranga use pannikuvaanga !

krubha said...

திரு.கார்த்திக், தி.க. காரங்க எப்படி இதை use பன்னுவாங்க? விளக்கவும். வசூல்ராஜா MBBS வசனத்தை மறுபடியும் படிக்கவும்.

Karthik said...

Aadha indhu madha thveshama parappii, saamiyaarunga ellame ayogyanunganu solli, naathigam ngara perla vote sambathichi, saamiyarungaloda ivanga adhigama anniyayam pannuvanga...

Kadavul illanu sollra gosti college nadathuthu ! Anda college la ezhaingalo, samuthayathoda adi mattathula irukaravangalo ellam padikka mudiyadu, yaaralo kaasu koduka mudiae tho, avangala mattum thaan mudiyum. itahanaikkum andha college debar panna 44 college list la irukku !

SurveySan said...

கமல் டயலாக் சூப்பரு.

krubha said...

Mr.karthik,will write an article about the people u describe as bad and about how the helped the society, even though there are bad between them, some like Periyaar,WRV and so many uplifted the lives of so many.

Karthik said...

Please write about their followers also !

Post a Comment