Saturday, January 29, 2011
நான் வருவேன்: ரஹ்மான் பாடுகிறார்
A Tamil song by A.R.Rehman featuring Aishwarya Rai Bachan. Produced by Y.M.Movies. Executive Producers Prinz Productions and Ganashankar Balachandran. Lyrics (Tamil) by Vairamuthu and A.R.Rehman
ராவனன் திரைபடத்தின் கடைசியில் End Credits ஓடும் போது ஒலிக்கும் பாடல், ஒரு தனிப் பாடலாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. மிகவும் அருமையான படத்தொகுப்பு, பாடல், குரல்,ஐஸ் அக்கா எல்லாமே மிகவும் அழகு, பார்த்து கேட்டு ரசிக்க.
காணொளி நன்றி:யூட்யூப்
Friday, January 28, 2011
இளையராஜாவின் புதிய பாடல்
இசைஞானி இளையராஜாவின் இசையில் சாதனா சர்கம் மற்றும் ஸ்ரீராம்பார்த்தசாரதி குரல்களில் சமீபத்தில் வெளி வந்திருக்கும் பாடல் ”அய்யன்” திரைப்படத்தில் இடம்பெறவிருக்கும் இந்த பாடல் எனது சமீபத்திய favorite
Labels:
Ilayaraja,
latest song,
Music,
Sadhana
Monday, January 24, 2011
Youtube ல் பார்த்து நான் மிகவும் ரசித்த பாடல்
மிகவும் அருமையான சிந்தனை, வெறும் BASS Guitar மாத்திரம் தான் உபயோக படுத்தபட்டுள்ளது மற்றவை எல்லம் vocalsம் விரலில் சிட்டிகையும் தான். இவர்களின் மொத்த விடியோ தொகுப்புக்கான சுட்டி:
Harmonize Projekt videos
நல்ல இசையை ரசிக்கும் எவரும் தவர விட கூடதவை இந்த விடியோக்கள்.
நன்பர் அவர்கள் கேட்டிருப்பது போல் இது தமிழர்களால் படமக்க படவில்லை, அந்த விவரங்கள் இங்கே:-
Harmonize Projekt featuring Kalyani, Harshitha, Pradeep & Keba. Produced by Sujith Unnithan for Rosebowl. Directed by Sumesh lal, Visual mix supervision Ajan, Edited by Sanath, Jobin, Sudheesh, Janson Paul, DOP Vipin Chandran, Camera by Sujith, Pradeesh, Mahesh, Art by Suresh, Lights Cameo.
தகவல்: youtube.
Tuesday, January 18, 2011
சென்னை சங்கமம் விடியோ காட்சிகள்
2010ஆம் ஆண்டு சென்னை பல்லாவரம் கண்டோன்மண்ட் பகுதியில் நடந்த சென்னை சங்கமத்தில் நடந்த சுவையான விடியோ காட்சிகள்.(மறுபடியும்).
Monday, January 17, 2011
சமத்துவ பொங்கல் 2011
நான் வசிக்கும் பகுதியான மண்ணிவாக்கத்தின் சொர்க்கபுரியாம் சண்முகாநகரிலே 16-01-2011 அன்று சமத்துவ பொங்கல் இதுவரை இல்லாத சீரோடும் சிறப்போடும் மிக பிரம்மாண்ட முறையிலே நகர் மக்கள் அனைவராலும் சிறுவர் பூங்காவில் கொண்டாடப்பட்டது. நகர் மகளிர் அனைவரும் இரவு பகலாக உழைத்து அழகான கோலங்கள் இட்டு விழா திடலை அலங்கரித்தனர்.
ஆடவர்கள் அனைவரும் பொதுநல சங்கத்தினருடன் சேர்ந்து சுமார் ஒரு வார காலம் தங்கள் பங்களிபினை வழங்கி இந்த விழா மிகுந்த சிறப்பாக நடை பெற உழைத்தனர். திண்டுக்கல் இளைய நிலா தப்பாட்ட கலை குழுவினர் தங்கள் ஆட்டம் பாட்டங்களோடு இந்த பொங்கல் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.D.லோகநாதன் அவர்கள், துனைத்தலைவர் திரு.M.M. கிருஷ்ணன், திரு. பொண்ணுசாமி மற்றும் ஊராட்சிமன்ற உருப்பினர்கள், மற்றும் பிரபலமான அரசியல் தலைவர்கள் திரு. புருஷோத்தமன், திரு செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நகரின் மகளிர் சுயஉதவி குழிவினர் ஒவ்வோர் குழுவினரும் ஒவ்வோர் பொங்கல் பானை வைத்து இயற்கைக்கு நன்று செலுத்தினர். தப்பாட்ட குழுவின் நடனம், மாட்டு வண்டி சவாரி, நகர் வாழ் குழந்தைகளின் கிராமிய நடனம் ஆகியவற்றை தொடர்ந்து சம பந்தி போஜனம் நடைபெற்றது.
முடிச்சூர் ”ஆதீஸ்வரர் ஆதரவற்றோர் இல்ல” குழந்தைகள் இந்த சம பந்தி போஜனத்தில் இரண்டாம் ஆண்டாக வந்து பங்கேற்றனர்.இந்த நிகழ்சிகளை எல்லம் ”கேப்டன் டிவி” குழிவினர் வந்து படம் பிடித்துக்கொண்டு சென்று தங்கள் கேப்டன் செய்திகளில் ஒளிபரப்பினர்.
மேலும் தகவல்கள் மற்றும் படங்கள்
@
http://shanmuganagar.blogspot.com/2011/01/2011.html

Wednesday, January 12, 2011
இன்றோடு ஓர் ஆண்டு
இந்த இலக்கில்லாதா பயணம் தொடங்கி இன்றோடு ஆண்டொன்று நிறைவாகிறது, ஆதரவளித்த அனைத்து நன்பர்களுக்கும், அடிக்கடி பதிவெழுத சொல்லும் தம்பி நவனீதகண்ணனுக்கும் நன்றிகள்.
Saturday, January 8, 2011
Exclusive:கவிஞர் வாலி @ சென்னை புத்தக கண்காட்சி 2011

Subscribe to:
Posts
(Atom)