Friday, October 1, 2010

கடவுளும் வழிபாடும் அரசியலும்

நேற்று வந்த தீர்ப்பு திருப்தி அளித்திருக்கலாம் சிலருக்கு, அதிருப்தியும் அளித்திருக்கலாம் சிலருக்கு. இந்த விஷயத்தை பற்றி பலருக்கும் பல கருத்துகள் இருக்க கூடும், இந்த விஷயம் சர்சைக்கு உள்ளானது மசூதி கட்டபட்டதாக சொல்லப்பட்ட 1528ஆம் ஆண்டில் அல்ல, 1853ல் தான் முதல் தகராறு வந்துள்ளது, சுமார் 75 பேர் மடிந்துள்ளனர் கலவரத்தில். ஏறக்குறைய 325 ஆண்டுகள் அங்கே எந்த பிரச்சனையும் நடந்ததாக தகவல் இல்லை, அந்த காலகட்டம் முகலாயர் ஆட்சியாகவே இருந்த போதிலும்.

ஆனால் 1853ல் ஆங்கிலேயர் ஆட்சி கால கட்டம், ஆங்கிலேயரின் வழக்கமான பிரித்தாலும் கொள்கையின் அடிப்படையிலே இரு மதத்தை சேர்ந்தவர்களையும் மோத விட்டிகலாம், அந்த நெருப்பு அனையாமல் இருக்கிறது இன்றளவும்.

நடந்த வழக்கு அந்த சர்சைக்குறிய இடம் யாருக்கு சொந்தம் என்பது, அந்த அடிப்படையில் பார்க்கையில் பல நூறு ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக யார் அந்த ஊரில் அல்லது அந்த இடத்தின் அருகில் யார் குடி இருந்திருப்பார்களோ அவர்களுக்கு தான் அந்த இடம் சொந்தமாக இருக்க கூடும், அந்த வகையில் வழக்கு தொடுத்த எவருமே அந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற ஆதாரங்களை தரவில்லை. யாருக்கும் சொந்தமில்லா நிலத்தை நீதி மன்றம் மூன்றாக பங்கீடு செய்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு நல்ல வலிமை வாய்ந்த மக்கள் நலம் விரும்பும் அரசாங்கமாக இருந்தால் யாருக்கும் சொந்தம் இல்லாத அந்த நிலத்தை கையகப்படுத்தி இருக்க வேண்டும். சர்சை ஏற்படுத்தும் இரு சாரரும் விரும்புவது அந்த இடத்தில் வழிபாடு நடத்தவே, அது போலவே அந்த இடத்தில் எந்த மததின் சின்னங்களும் இல்லாமல் ஒரு பொதுவான தியான மண்டபம் அல்லது அது போன்றதொரு கூடத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். யார் வேண்டுமானலும் வரலாம் வழிபடலாம் ஆனால் மத சின்னங்கள் அங்கே கூடாது என.

அது போல அல்லமல் ஏதோ கட்டபஞ்சாயத்து போல ஒரு விஷயத்தை அறிவித்தி இருக்கிறார்கள். ப.ஜா.க அங்கே ராமர் கோவில் கட்டுவேன் என்கிறார்கள், ஒரு காங்கிரஸ்காரரோ அப்படியானல் அங்கே முஸ்லீம்கள் பாபர் மசூதி கட்டுவார்கள் என உசுப்பி விடுகிறார். மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வராமல் இருந்தால் சரி. மக்கள் நலனில் அக்கரை இல்லா அரசியலாலர்கள் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் முடிவுக்கு வரப்போவதில்லை.


எந்த கடவுளும் தன்னை வழிபட ஒரு இடம் ஏற்படுத்தி கொடுக்கும் படி யாரையும் கேட்கவில்லை. அப்படி ஒரு இடம் தேவைபட்டல் சர்வ வல்லமை பொருந்திய கடவுள் அதை ஏற்படுத்தி வைத்திருப்பார்.இதெல்லம் நாம் நமது வசதிக்காகவும் வேறு பல விஷய்ங்களுக்காகவும் ஏற்படுத்திக்கொண்டது. பிறக்கும் போது ஏதும் அறியாத குழந்தையாக தான் பிறக்கிறோம் செத்த பின்பும் ஏதும் அறியாமல் பிணமாக தான் கிடக்கிறோம். பிறந்தால் குழந்தை செத்தால் பிணம், மற்றதெல்லம் இடையில் வந்து இடையிலேயே போவது. மனிதர்களாக வாழ்வோம் இறுதி வரை.

8 comments:

Krubhakaran said...

ஏதோ என் அறிவுக்கு எட்டியவற்றை பதிவு செய்திருக்கிறேன்

Anonymous said...

//ஆனால் 1853ல் ஆங்கிலேயர் ஆட்சி கால கட்டம், ஆங்கிலேயரின் வழக்கமான பிரித்தாலும் கொள்கையின் அடிப்படையிலே இரு மதத்தை சேர்ந்தவர்களையும் மோத விட்டிகலாம், அந்த நெருப்பு அனையாமல் இருக்கிறது இன்றளவும்.//

After 1853, muslim rulers( Turkish Dogs) lost their power to the british,(particularly Tipu Sultan and delhi sultan, a Turkish Dogs are exiled by east india company in 1799 and 1852. so naturally native indians attempt to revive the identity and recover their lost lands.

Anonymous said...

//எந்த கடவுளும் தன்னை வழிபட ஒரு இடம் ஏற்படுத்தி கொடுக்கும் படி யாரையும் கேட்கவில்லை//

In 622AD,Muhammad ibn ‘Abdullāh killed thousands of children and women in Mecca and illegally occupied their lands. Today, his followers again attempt to occupy the Indians land. This proof that these dogs are thief and robbers of barbaric tribes.

Krubhakaran said...

கருத்துகளை கண்ணியத்துடன் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன், அனானி ந(ன்)பரிடம். உங்கள் பெயரோடே உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே?

Anonymous said...

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 15 லட்சம் நிதியுதவி: ஷியா முஸ்லீம் அமைப்பு

லக்னெள: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 15 லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஷியா பிரிவு முஸ்லீம் அமைப்பு அறிவித்துள்ளது.

ஹூசைனி டைகர்ஸ் என்ற இந்த ஷியா முஸ்லீம்கள் பிரிவு இளைஞர் அமைப்பின் தலைவர் சமீல் ஷஸ்மி கூறுகையில்,

அயோத்தி பிரச்சனையை இத்தோடு முடிவுக்குக் கொண்டு வருவது தான் அனைவருக்கும் நல்லது. இதனால் லக்னெள நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டாம் என்று சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தையும், முஸ்லீம் தனிச் சட்ட வாரியத்தையும் கேட்டுக் கொள்கிறோம்.

சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சி்ங் யாதவும், டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் சையத் அகமத் புகாரியும் இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது துரதிஷ்டவசமானது.

இந்தப் பிரச்சனையை இத்தோடு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றே பல முஸ்லீம் அமைப்புகளும் விரும்புகின்றன. இது தொடர்பாக முஸ்லீம் தனி சட்ட வாரிய நிர்வாகிகளை அணுகி பேசுவோம்.

லக்னெள நீதிமன்றத் தீர்ப்புக்கு முன், என்ன தீ்ர்ப்பு வந்தாலும் அதை ஏற்போம் என்று அனைத்துத் தரப்பினருமே கூறினார்கள். இப்போது அதை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்று சொல்வது தவறு.

பிரச்சனையை இத்தோடு முடித்துக் கொண்டு, அந்த இடத்தில் கோவிலையும் மசூதியையும் கட்ட இந்துக்களும், முஸ்லீம்களும் கைகோர்க்க வேண்டும். இதற்காக ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும்.

அந்த வகையி்ல் கோவில் கட்ட எங்கள் அமைப்பு ரூ. 15 லட்சத்தை வழங்கும். அதே போல மசூதி கட்ட இந்து அமைப்புகளும் உதவ வேண்டும், இதில் இடைஞ்சல்களை ஏற்படுத்தக் கூடாது என்றார்.

அகில இந்திய முஸ்லீம் தனிச் சட்ட வாரிய உறுப்பினரும் இந்தியாவின் மூத்த ஷியா பிரிவு தலைவருமான கல்பே ஜவ்வாத் தான் இந்த ஹூசைனி டைகர்சின் அமைப்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Great gesture

Anonymous said...

http://thatstamil.oneindia.in/news/2010/10/02/shia-youth-group-offers-donation-ram-temple.html

above news is from this link

ராஜ நடராஜன் said...

உங்கள் இடுகை ஆக்கபூர்வமான மாற்று வழி தீர்வாக இருப்பது மகிழ்ச்சி.தீர்ப்புக்கு முன்பே இத்தனை வருடங்களில் பெரும்பாலோரின் கருத்தெடுப்புக்கும் சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம்.

1993ம் ஆண்டுவாக்கில் இந்தியா டுடே இந்தமாதிரி ஆக்கபூர்வமான மாற்றுவழி கருத்துக்களை கேட்டது.அதில் நீங்கள் சொன்னதும் ஒன்று.இப்பொழுது நீதிமன்றம் கருத்து சொன்னதின் பின் உச்சநீதிமன்ற தீர்ப்பு மட்டுமே.அதில் வேண்டுமானால் சில மாற்றங்களை உயர்நீதிமன்ற தீர்மானத்துடன் இணைக்க மட்டுமே வழியுண்டு.

Krubhakaran said...

உங்கள் கருத்துகளுக்கு நன்றி திரு ராஜ நடராஜன் அவர்களே. தேச நலனின் அக்கரை இல்லாத அரசியல் வாதிகள் பலர் இந்த விஷயத்தின் மூலம் ஆதாயம் அடைய பார்கின்றனர், சும்மா இருக்கும் மக்களை உசுப்பி விடுகின்றனர், என்ன செய்வது நம் தேசத்தின் தலை எழுத்து இவ்வளவு தான், நல்லவன் எவனும் அரசியலில் வர முன் வரமாட்டன், நம் தலையெழுத்து அயோக்கியர்களில் இருந்து ஒருவன தான் தேர்ந்தெடுக்க வேண்டும், அவர்கள் வைத்ததே சட்டமாக இருக்கும். சட்டத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பு சரியாக இல்லாவிட்டலும் மக்கள் ஏற்று கொண்டு அமைதியாக இருப்பது இந்த புல்லர்களுக்கு பொருக்கவில்லை.

இந்தியா டுடே கருத்து கனிப்பு பற்றி நான் அறியேன், அப்போது 15வயது, இந்த விஷயங்களில் எல்லம் அவ்வளவு ஈடுபாடு இல்லாத காலகட்டம். உங்கள் கருத்துகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

Post a Comment