நன்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கினங்க, ராஜாவின் ரமணமாலையிலிருந்து ஒர் பாடலின் வரிகள்:-
காரணம் இன்றி கண்ணீர் வரும்- உன் கருணை விழிகள் கண்டால்,
காரணம் இன்றி -
கருக்குழி வழி தன்னை அடைக்கும் விழி
கருவினில் திரு வந்து நிறைந்த விழி
இரு விழி தரும் ஒளி திறந்திடும் அருள் விழி,
காரணம் இன்றி
பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி
அரற்றுதல் தவிர வேறில்லை வழி
அருந்தவச்சுடரே அருள்நிறை கடலே
அடியவர்கிறங்கி வந்தணைத்திடும் அருளே
தொழுதேன் தொழுதேன் விழி திறப்பாய்
பிழைகள் பொறுத்தே பழி எரிப்பாய்
இருவிழி தரும் ஒளி திறந்திடும் அருள்வழி,
காரனம் இன்றி
பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்- நல்ல
அருள் வழி தரும் பெரும் துயர் துடைப்பாய்
எழில் ஞாயிறு போல் அருள் ஞாயிறு நீ
ஒளி தனை பொழிந்திடும் கருணாநிதி நீ
தொழுதேன் தொழுதேன் விழி திறப்பாய்
பிழைகள் பொறுத்தே பழி எரிப்பாய்
இருவிழி தரும் ஒளி திறந்திடும் அருள்வழி,
காரனம் இன்றி
பாடலை கேட்க:-
Friday, April 23, 2010
Subscribe to:
Post Comments
(Atom)
4 comments:
காரணம் இன்றி இல்லை, மனம் உருகி கண்ணீர் வருகிறது....
எல்லம் இறைவனின் மகிமை தான் பாரத். இசை இறைவனுக்கு நிகரானது அல்லவா? கிருத்துவ வேதம் கூட, ஆதியில் சப்தம் இருந்தது அது இறைவடிவாகவே இருந்தது என சொல்வதாக கேள்விபட்டதுண்டு. ஓங்கார நாதத்தில் இருந்து தான் அண்ட சராசரங்கள் தோன்றியதாக நம்பிக்கை. தூய்மையான நாதத்தில் நாம் நாதனை உனரலாம்.
இசைஞானி இயற்றிய பாடல் இது
அருமையான பாடல் இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் கண்ணில் கண்ணீ வருகிறது. ரமணர் திருவடிகளே சரணம்.
Post a Comment