Wednesday, January 13, 2010

விழாக்களுக் கொண்டாட்டங்களும் இவர்களுக்கு உண்டா?

சமீபத்தில் செய்திதாளில் படித்த ஒரு செய்தி (http://www.hindu.com/2010/01/11/stories/2010011158230300.htm) மனதில் சில கேள்விகளை எழுப்பியது.

”பாடி கூலி” எனப்படும் மனிதர்கள், நம்மை போலவே எல்லா உணர்வுகளும் உள்ள மனிதர்கள், எப்படி உணர்வுகளை கட்டுபடுத்தி அல்லது உணர்வுகள் இல்லாமல் தொடர்வண்டியில் அடி பட்டு சிதைந்து உருக்குலைந்து போன மனிதர்களின் மிச்சங்களை(Final Destination series, சேவிங் ப்ரைவேட் ரையான் போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு மனித உடலின் மிச்சங்கள் எப்படி இருக்கும் என்பது தெரியும்) சேகரித்து அனுப்புகிறார்கள் என்று, இதற்கு அவர்களுக்கு கிடைக்கும் ஊதியமோ மிகவும் குறைவு(ரூ.50-150). மேற்சொன்ன செய்தியில் உள்ள வரிகள்”Vetri, along with six of his colleagues, has to clear close to 35 corpses a month and must carry it on their shoulders to the mortuary in the Government General Hospital. “On a number of occasions, we have to guard the corpse till police officials come for investigation. We also have to guard the remains from dogs near the tracks,” adds Arumugam (27), another body coolie in Egmore. யோசித்து பாருங்கள் நானோ நீங்களோ செய்ய துனிவோமா? இத்தனைக்கும் இவர்கள் தொடர்வண்டி துறையின் நிரந்தர ஊழியர்களோ அல்லது வேறு சலுகைகளோ இவர்களுக்கு கிடையாது. ஒரு வேளை உனவுக்காக அல்லது ஒரு நாள் பிழப்புக்காக இந்த வேலை. இவர்களும் உணர்வுகள் உள்ள மனிதர்கள் தான் என்பதர்க்கு சாட்சியாக என் அனுபவம் ஒன்று:-

சுமார் 5 -6 ஆண்டுகளுக்கு முன் சென்னை பெரம்பூர் தொடர்வண்டி நிலையத்தில் நன்பர் ஒருவருக்கா காத்திருந்த போது அழுக்கு லுங்கி,சட்டையுடன் சற்றே போதையில் ஒரு நபர் ரயில் படியில் Style ஆக தொற்றிகொண்டு ஏறிக்செல்லும் இளைஞர்களை பார்த்து திட்டிக் கொண்டிருந்தார்,அவ்வாரு செய்ய வேண்டாம் உங்கள் பெற்றோர் எப்படி எல்லம் உங்களை வளர்த்து ஆளாக்கி இருப்பார்கள் கீழே விழுந்து சாக போகிரீர்கள் என்று. சமூக ஆர்வலரான என் நன்பர் வந்ததும் அந்த நபரிடம் பேச்சு கொடுத்த போது தெரிந்தது அந்த நபர் இருப்பு பாதையில் அடிபட்டு மரணிப்பவர்களை சுமக்கும் ”பாடி கூலி” என்று, அவரது அனுபவங்களை விளக்கி சொல்லிக்கொண்டு இருந்தார், பொதுவாக அவர்கள் மது அருந்தி விட்டு தான் சவங்களை எடுக்க போவார்களாம். சிறிது நேரம் பேசிவிட்டு நன்பர் அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு நாங்கள் எங்கள் வேலையை பார்க்க போய்விட்டோம்.

அதன் பிறகு நீண்ட நாட்க்கள் கழித்து இந்த செய்தியை படிக்கும் போது இவர்களின் நினைவு வந்தது, எத்தனையோ நல்ல நிறுவனங்கள் நல்ல பல விஷயங்களை செய்ய்து வருகின்றன, இவர்களுக்கும் யாராவது உதவ முன் வருவார்களா? நம் போன்றோர் எத்தனையோ பொங்கல், தீபாவளி போன்ற விழாக்களும் கொண்டாட்டங்களும் செய்து வருகிறோம், ஆனால் இவர்களை போன்றவர்களுக்கு?

இந்த விஷயங்களை எழுதிக்கொண்டிருக்கும் போது தோன்றிய ஒன்று, இவர்களை பற்றி ஒரு அல்லது இவர்களின் வாழ்கையை பின்னனியாக வைத்து ஒரு சிறுகதை அல்லது ஒரு குறும்படம் தயாரிக்க முயற்ச்சி எடுத்தால் என்ன?

1 comment:

geethappriyan said...

இது பற்றி ஆறு வருடங்கள் முன்பு விகடனில் ஒரு கட்டுரை வந்ததோடு சரி,நிச்சயம் குறும்படம் எடுக்க ஏற்ற களம்.நல்ல பதிவு

Post a Comment