Thursday, January 14, 2010

14-01-2010 சென்னை சங்கமம், பல்லாவரம் கண்டோன்மண்ட் பகுதியில்

சென்னை சங்கமம் என்னும் கலாச்சார திருவிழா கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் திருநாள் சமயத்தில் சென்னையில் தமிழ் மைய்யம் மற்றும் கவிதாயினி(?) கனிமொழி அவர்களின் முயற்ச்சியில் நடத்தப்பட்டுவருகிறது. இத்தனை ஆண்டுகளாக இந்த நிகழ்வை காண்பதற்கான முயற்ச்சியை நான் எடுத்ததில்லை. இந்த ஆண்டு நேற்றைய செய்தி தாள்களில் நிகழ்ச்சி நிரல்களை பார்த்துவிட்டு ஒரு பதிவு போட்டு இருந்தேன், சரி என்ன தான் நடக்கிறது சென்னை சங்கமத்தில், சென்று தான் பார்ப்போமே என்று நன்பர் கார்த்திக் மற்றும் தம்பி நந்துவுடன் சென்னை பல்லாவரம் கண்டோன்மண்ட் பகுதியில் நடக்கும் விழாவிற்க்கு செல்ல முடிவெடுத்து சென்றோம்.

சுமார் 5.30 மணிக்கு அங்கு சென்ற போது வில்லு பாட்டு கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தார்கள், கூட்டமும் அவ்வளவாக இல்லை.





ஒரு பக்கம் பொய் கால் கலைஞர் ஒருவர் நடை பழகி கொண்டிருந்தார்



அதை நவ நாகரீக நங்கை ஒருவர் படம் பிடித்து கொண்டிருந்தார்.
இன்னொரு புறம் கலைஞர்கள் அவர்களின் கலை வகைகளை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர்


பல தரப்பட்ட மக்களும் சாதி மத பேதமின்றி வரத்தொடங்கி இருந்தார்கள்


வில்லு பாட்டு முடிந்தவுடன் தேவராட்டம் தொடங்கியது, ஆடிய கலைஞர்களும் இசைத்த கலைஞர்களும் தங்கள் திறமையை நண்கு வெளிக்காட்டினர்.



முன்பு சொன்ன அந்த நவ நாகரீக நங்கையு்ம் எல்லா நிகழ்வுகளையும் தன் கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.

சூரியன் மெதுவாக மறைய தொடங்கியது கூட்டமும் மெதுவாக சேரத்தொடங்கியது.


தேவராட்டத்தை தொடர்ந்து கேரள பாரம்பரிய களரி(தமிழகத்தை தாயகமாக கொண்டதாம்)சண்டை, வல்லுநர்களாள் செய்து காண்பிக்கப்பட்டது. மிகவும் கவனத்துடன் செயல் பட வேண்டிய சண்டை இது, காண்போரை அதிசயத்தில் ஆழ்த்தியது.




அடுத்து ஆந்திரா பாரம்பரிய நடனங்கள் மற்றும் பாடல்கள் கொண்டு வந்தனர் ஆந்திர கலைஞர்கள். இவர்களின் கலை வெளிப்பாடே இன்றைய highlight எனலாம், அவ்வளவு அருமையாக அவர்களின் நடனமுன் பாடல்களும் இருந்தன.







நேரம் ஆக ஆக கூட்டம் குவிய தொடங்கியது, நம் மக்கள் தொலைகாட்சி பெட்டியையும், திரைபடங்களையும் விட்டு விட்டு இது போன்ற நிகழ்சிகளுக்கு வந்தது மிகவும் வியப்பை தந்தது.




ஆந்திர கலைகளை தொடர்ந்து, தமிழகத்தின் தப்பாட்டமும் அதன் பிறகு “நக்கு முக்கா” புகழ் சின்ன பொன்னு அவர்களின் பாடல்களும் வந்தன. சின்ன பொன்னு அவர்கள் வரும் வரை இது ஒரு பாரம்பரிய கலை விழாவாகவே நடந்தது, அவர்களின் வருகைக்கு பின் கூட்டமும் அதிகமாகி விழாவும் தன் நிறம் மாற தொடங்கியது, ஒரு அம்மன் கோவில் கச்சேரி போல ஆகிவிட்டது, ரசிகர்களின் விசில் சப்தமும் ஆர்பாட்டமும், விழாவை காண வந்த சிலர் அவர்களின் குழந்தைகளை மேடையேற்றி ஆட செய்வதுமாக அந்த பாரம்பரிய கலை விழா சூழலே கெட்டு விட்டது. நானும் வெறுப்படந்து பாதியிலேயே கிளம்பி வந்து விட்டேன்.







சென்னை போன்ற நகரங்களில் பிறந்து வளர்ந்த என்னை போன்றவர்களுக்கு இது போன்ற கிராமிய பாரம்பரிய கலை விழா ஒரு eye opener என்றே சொல்லலாம். இது போன்ற விழாக்கள் ஊக்குவிக்க பட வேண்டியவை. எல்லா தரப்பு மக்களையும் கவக்கூடியதாக இந்த விழா இருந்தது, ஆனால் பாரம்பரிய கலைகளுக்கு மட்டுமே ஆன விழாவா இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய ஒரு முக்கிய அம்சம் ஒலி அமைப்பு, பம்மல் பகுதியை சேர்ந்த ”கணேஷ் ஆடியோஸ்” மிகவும் அருமையான ஒலி அமைப்பு செய்திருந்தார்கள். மொத்தத்தில் சென்னை சங்கமம் வரவேற்க்க,ஆதரிக்க வேண்டிய ஒன்றே.

குறிப்பு:-அற்புதமான கேமரா கோனங்களில் நிகழ்ச்சிகளை பதிவு செய்து கொடுத்த தம்பி நந்து என்று அழைக்கப்படும் நவநீத கண்ணனுக்கு நன்றிகள்.

VIDEOS:

http://www.youtube.com/watch?v=YD44qEDFdz4

http://www.youtube.com/watch?v=YKsLMUhTKaY

http://www.youtube.com/watch?v=VxtjaGZ8nSY

http://www.youtube.com/watch?v=jVGPKaFo_BQ

http://www.youtube.com/watch?v=cRXp44z5C-Y

http://www.youtube.com/watch?v=tsW6RgxSx8k

http://www.youtube.com/watch?v=H8Pn_Klbw70

http://www.youtube.com/watch?v=NuLPSKUxMGA

http://www.youtube.com/watch?v=HCL2W2QWY10

http://www.youtube.com/watch?v=S4hji1UA7Dw

9 comments:

அண்ணாமலையான் said...

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்...

k said...

thak u

Navaneetha Kannan said...

First of all thanks to our elder brother’s Sridharan and Kruba Karan for giving such a fantastic camera (Canon S5 IS) for the photographs and video. I think camera plays the important role. Second thing is the way of handling the camera. In my learning phase I think I gave some good quality of outputs. Hereafter viewers have to tell their comments about the blog and photography. Motivation and appreciation gives some good quality of works. We are expecting the more support in the future.

Gayathri said...

Hi anna's,

Happy to encourage chennai sangamam.
Many Folk artistes from other states have also been paricipated in the seven-day festival.So we can also enjoy other state dances. I can see lot of audience enjoying this festival. Important thing to tell,that is photography. Nice to see these photos. Photo angles and clarity are good. We can see different religion also watch this festival.
Thanks for visualising the culture festival.Keep going. My best wishes.

NavaneethaKannan said...

Thank you Gayathri

Jackiesekar said...

நவநீதன் வாழ்த்துக்கள் உங்கள் புதிய பயணத்துக்கு....

கர்ணன் said...

நல்ல படங்கள். நந்துக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் போகலுக்கும் நன்றி

எட்வின் said...

பகிர்வுக்கு நன்றி. நிச்சயமாக நாட்டுப்புற கலைகள் ஊக்குவிக்கப்பட வேண்டியவையே

Navaneetha Kannan said...

நன்றி ஜாக்கி சேகர், கர்ணன், எட்வின் for your valuable comments.

Post a Comment